- ஸ்வர்ணலட்சுமி
ஒரு கைப்பிடி முருங்கை இலை இருந்தாலே போதும் டேஸ்டியான ஹெல்தியான சூப் தயார் செய்யலாம். அதுதாங்க முருங்கைக் கீரை சூப் அல்லது மோரிங்கா சூப்.. ரொம்ப ஈசியாக செய்யலாம். வாங்க கிச்சன் குள்ள போகலாம்.
தேவையான பொருட்கள்:
1 .முருங்கை இலை ஒரு கப்
2. சிறிய வெங்காயம் 6 உரித்தது
3. பூண்டு ஆறு உரித்தது
4 .சீரகம் மிளகு தலா ஒரு ஸ்பூன்
5. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
6. இஞ்சி ஒரு சிறிய துண்டு
7. உப்பு தேவைக்கு ஏற்ப
8 . தண்ணீர் 500 மில்லி லிட்டர்
செய்முறை:

1. முருங்கை இலைகளை நன்றாக கழுவி தண்ணீர் வடித்துக் கொள்ளவும் .பிறகு ஒரு பவுலில் 500 மில்லி லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் முருங்கை இலைகளை போடவும்.
2. சீரகம் ,மிளகு ,மஞ்சள் தூள் ,சிறிய வெங்காயம், பூண்டு, இஞ்சி ஒரு சிறிய துண்டு தட்டியது, ஒவ்வொன்றாக சேர்க்கவும்
3. நன்றாக கொதிக்க விடவும் .தண்ணீர் 400 மில்லி லிட்டர் வரும் வரை நன்றாக கொதிக்க விடவும். (நாம் சேர்த்த முருங்கை இலை மற்றும் சீரகம் மிளகு இவற்றின் நன்றாக இறங்கி விடும். நல்ல சூப்பின் நறுமணம் வரும்)
4. உப்பு தேவைக்கு ஏற்ப சேர்க்கவும் .ஸ்டவ் அணைத்த பிறகு அந்த பவுலை ஒரு தட்டு போட்டு ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும்.
5. பிறகு இந்த முருங்கை இலை சூப்பை வடிகட்டி சர்விங் பவுலில் மாற்றவும்.
குறிப்பு: கான்ஃப்ளேக்ஸ் சிப்ஸ் முருங்கை இலை சூப் மேல் தூவி பரிமாறவும். அவ்வளவு ருசியாகவும், தொண்டைக்கு இதமாகவும் இருக்கும் இந்த முருங்கை இலை சூப்.
முருங்கைக்கீரை பயன்களை பற்றி பார்ப்போமா:
1 ."கீரையின் அரசன்" என்று கூறப்படும் முருங்கைக்கீரையில் பொட்டாசியம், கால்சியம், காப்பர் ,சோடியம், ஜிங்க் மெக்னீசியம், பீட்டா கரோட்டின் ,நார்ச்சத்து, புரதம் போன்ற ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
2 .மேலும் வைட்டமின் ஏ ,சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது .இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை நிர்வகிக்க உதவுகிறது.
3 .முருங்கைக்கீரை நீரிழிவு நோய்க்கு சிறந்த ஆயுர்வேத மூலிகைகளில் ஒன்றாகும். இன்சுலின் உணர்திறன் அதிகரிக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
4. கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது .உடல் எடையை குறைக்கும். இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற ஆபத்துக்களை தடுக்கிறது.
5. புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் முருங்கைக் கீரையில் அதிகம் உள்ளன. மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
6. முருங்கைக் கீரையில் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட்கள் சருமத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது
7. எலும்புகளை வலுப்படுத்தும். செரிமான கோளாறுகளுக்கு எதிராக போராட உதவும். மலச்சிக்கல் ,வீக்கம், வாயு மற்றும் இரைப்பை அலர்ஜி ஆகியவற்றை போக்க உதவுகிறது.
இத்தனை பயனுள்ள முருங்கைக்கீரை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிட்டு நல்ல ஆரோக்கியமான உடல் நலம் பெற்று வாழ்வோம். மேலும் இது போன்ற பயனுள்ள ரெசிபிகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
கலைஞானி கமல்ஹாசன் 71.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
நெல்லையில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்: மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேட்ட கேள்வி.. திமுகவை நோக்கி திருப்பி விடும் அதிமுக!
குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதை கைவிட வேண்டும்: சீமான்
2 நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு!
Bihar Assembly elections: களத்தைக் கலக்கும் இளம் புயல் மைதிலி தாகூர்.. அதிர வைக்கும் யூடியூபர்!
அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது தவறு.. டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி
2026ல் திமுக - தவெக இடையே தான் போட்டி... அதிமுகவிற்கு 3வது இடம் தான் : டிடிவி தினகரன் பேட்டி!
{{comments.comment}}