ஜெனீவா: சுவிட்சர்லாந்தில் முகத்தை மறைக்கும் வகை புர்கா ஆடைகள் அணிவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்த புதிய உத்தரவு ஜனவரி 01ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் பொதுவெளியில் முகத்தை மறைக்கு வகையிலான உடைய அணிய தடை விதிப்பது குறித்து 2021ம் ஆண்டு மார்ச் மாதம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த தடை உத்தரவிற்கு ஆதரவு தெரிவித்து அதிகமானவர்கள் ஓட்டளித்திருந்தனர். இந்நிலையில் கிட்டதட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டத்தின் படி, விமானங்கள், தூதரக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள், பிற புனித தலங்கள், மசூதிகள் போன்ற இடங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு உடல்நிலை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக முகத்தை மறைத்துக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மத ரீதியாகவோ, அல்லது தட்பவெப்ப நிலை காரணமாகவோ முகத்தை மறைக்கும் வகையிலான ஆடைகளை அணிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறுபவர்களுக்கு உடனடியாக 1000 சுவிஸ் பிராங்க்ஸ், அதாவது இந்திய மதிப்பில் ரூ.10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அவ்வாறு செலுத்த மறுப்பு தெரிவித்தால் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை அபராதம் செலுத்த நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}