- தி. மீரா
அறுபதைத் தொட்டாலும் அழகாய் மலரும் பூவே நீ!
அன்புத் தந்தையின் இதயத்தில் என்றும் செல்ல மகளே!
மூத்தவள் என்ற பொறுப்பை முத்தாகச் சுமந்தவளே!
முழு குடும்பத்தையும் அன்பால் அரவணைத்தவளே!
சகலகலா வல்லியே, சமையலில் சுவையின் ராணியே!
உன் கைப்பக்குவத்தில் வீடே மணம் வீசுமே!
கோலமிடும் உன் கைகளில் கலைகள் எல்லாம் பூக்குமே!
குணம் நிறைந்த உள்ளத்தில் நம்பிக்கை ஒளிருமே!
ஆசிரியராய் அறிவொளியை அள்ளி வழங்கியவளே!
அன்பான சொற்களால் நெஞ்சங்களை வென்றவளே!

சொந்தங்கள் அனைவரையும் சிரிப்பால் ஈர்த்தவளே!
இனிப்பைப் போல உறவுகளில் இனிமையாய் கலந்தவளே!
இரு அழகு மகள்களை பாசத்துடன் வளர்த்த தாயே!
இல்றத்தை இனிமையாய் பொறுமையாய் காத்தவளே!
வாழ்க்கைத் துணையுடன் அன்பில் இணைந்து நடப்பவளே!
குடும்பத்தின் துணையாய் உறுதியுடன் நிற்பவளே!
வயது அறுபது என்றாலும் வசந்தம் உன் மனமே!
லட்சுமி என்ற பெயருக்கே பெருமை சேர்ப்பவளே!
மகிழ்வுடன் நீ நூறாண்டு வாழ்கவே
(ஈரோடு கவிஞர் தி. மீரா, தனது சகோதரியும் கடலூர் வேணுகோபாலபுரம் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றுபவருமான லட்சுமியின் 60வது பிறந்தநாளையொட்டி எழுதிய வாழ்த்துப் பா)
மக்களுக்கு நல்லது செய்யனும்...நிர்வாகிகளுக்கு அட்வைஸ்: அரசியலுக்கு வர போகிறாரா சிவகார்த்திகேயன்?
அறுபதிலும் அழகாய் மலர்ந்த பூவே!
கோடைக்கால மேகம்!
மன இறுக்கம்!
மழைத்துளியும் ..மலர் இதழும்!
காலை சக்கரம்!
உண்மையைப் பேசிய நன்னிலா.
புத்தகங்கள்.. கள்ளத்தனத்தை களைந்திடச் செய்யும்!!
நான் கம்ப்யூட்டர் கற்ற கதை
{{comments.comment}}