- தி. மீரா
அன்னி பெசண்ட் அம்மையார் (1847–1933) ஒரு ஆங்கிலேய சமூக சீர்திருத்தவாதி, பெண்ணியவாதி, தியோசபிஸ்ட், மற்றும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர் ஆவார். இவர் இந்தியாவிற்கு வந்து, இங்குள்ள மக்களின் முன்னேற்றத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும் பாடுபட்ட ஒரு வீரமங்கை ஆவார்.
பிறப்பு: அக்டோபர் 1, 1847; லண்டன், இங்கிலாந்து. பெற்றோர்: வில்லியம் பைஜ்வூட் (அயர்லாந்தில் பிறந்தவர்), எமிலி. சாதாரண ஐரிஸ் குடும்பம்; தந்தை அன்னிக்கு 5 வயதாக இருக்கும்போது மரணமடைந்தார்.
19 வயதில் (1867) பிராங்க் பெசண்ட் என்ற மதகுருவை மணந்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 1873-ல் கணவரைப் பிரிந்து தனித்து வாழத் தொடங்கினார்.
இங்கிலாந்தில் இருந்த காலத்தில் அன்னி பெசண்ட் பல்வேறு சமூக சீர்திருத்தங்களில் ஈடுபட்டார். தொழிலாளர் உரிமைகளுக்காகப் போராடினார்; விவசாயக் கூலிகளின் தொழிற்சங்கம் அமைக்க உழைத்தார். பெண் விடுதலை, கல்வி உரிமை, சமூக நீதி ஆகியவற்றிற்காக எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் செயல்பட்டார். மத நம்பிக்கைகள், அரசியல், சமூகம் பற்றிய தனது கருத்துகளைப் பரப்பினார்.

1889-ல் பாரீஸில் பிளாவட்ஸ்கி அம்மையாரைச் சந்தித்த பிறகு, அன்னியின் சிந்தனைப் போக்கில் மாற்றம் ஏற்பட்டு பிரம்மஞான சங்கத்தில் (தியோசபிகல் சொசைட்டி) உறுப்பினரானார். 1893-ல் தியோசபிகல் சொசைட்டியின் சார்பாக இந்தியா வந்தார்; பின்னர் சென்னையில் நீண்ட காலம் வாழ்ந்தார். இந்திய மதங்கள், கலாச்சாரம், குறிப்பாக ஆரிய தர்மம், இந்து தத்துவங்கள் ஆகியவற்றில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார். அன்னி பெசண்ட் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார்
இந்தியர்களுக்கு சுயஆட்சி வேண்டும் என்று வலியுறுத்தி ஹோம் ரூல் இயக்கத்தைத் தொடங்கினார். 1913-ல் காமன்வீல் பத்திரிகையைத் தொடங்கினார்; 1914-ல் சென்னையில் இருந்து நியூ இந்தியா இதழை வெளியிட்டார். ஹோம் ரூல் இயக்கத்திற்காகச் சிறைவாசம் அனுபவித்தார்; இது இயக்கத்தை மேலும் பிரபலமாக்கியது.
1917-ல் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மகாநாட்டிற்குத் தலைமை தாங்கினார்; காங்கிரஸ் பேரியக்கத்தின் மாநாட்டில் தலைமை வகித்த முதல் பெண்மணி என்ற சிறப்புப் பெற்றார். மகளிர் கல்வி, உரிமைகள் ஆகியவற்றிற்காகப் பாடுபட்டார்.
1917-ல் அம்மு, மார்க்கரெட் சகோதரிகள், முத்துலெட்சுமி ரெட்டி ஆகியோருடன் சேர்ந்து மகளிர் சங்கத்தினைத் தொடங்கினார். சென்னையில் மதராஸ் மகாஜன சபை போன்ற கல்வி நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்.
தியோசபிகல் சொசைட்டியின் சர்வதேசத் தலைவராக 26 ஆண்டுகள் (1907–1933) பணியாற்றி இவ்வியக்கத்தை உலகளவில் விரிவாக்கினார். இந்தியாவில் தியோசபி தலைமையகத்தை (அடையார், சென்னை) உருவாக்கினார். 200-க்கும் மேற்பட்ட நூல்கள் மற்றும் சிறு புத்தகங்கள் மூலம் தியோசபி கருத்துகளை எளிமையாக்கிப் பரப்பினார்.
இந்திய மத-தத்துவ மறுமலர்ச்சிக்கு வித்திட்டார்; இந்து கல்வி நிறுவனங்களை நிறுவினார். தியோசபி கருத்துகளைச் சமூக, அரசியல் செயல்பாடுகளாக (ஹோம் ரூல், பெண்கள் உரிமை, கல்வி சீர்திருத்தம்) மாற்றினார்.
இவ்வாறு, அன்னி பெசண்ட் அம்மையார் தியோசபிகல் சொசைட்டியை ஒரு தத்துவ இயக்கமாக மட்டுமல்ல, சமூக-கல்வி-அரசியல் சீர்திருத்த இயக்கமாகவும் மாற்றிய ஒரு மகத்தான தலைவர்
செப்டம்பர் 20, 1933ம் ஆண்டு, அன்னி பெசன்ட் மறைந்தார். இந்தியாவில், குறிப்பாக சென்னையில், இவரது பணிகள் இன்றும் நினைவுக் கூறப்படுகின்றன.
சமையல் With ஸ்வர்ணா.. டாக்டர் மாமாவுக்குப் பிடிச்ச ராகி முருங்கை கீரை & பூ அடை!
தென்தமிழ் தலையங்கம்: விஜய்க்கு கூடும் கூட்டம்.. எதைக் குறிக்கிறது?
அந்தக் கண்ணாடிக்காரன் கொடுத்து வைத்தவன்!
பக்குவமாக பட்டறிவு புகுத்தி.. ஆக்கப்பூர்வ யோசனைகள் சொல்லும்.. அபூர்வப் பெட்டகங்களே!!
அண்ணா காபி சாப்டீங்களா அண்ணா.. Have a Hot Coffee!
அக்டோபர் வந்தாச்சு.. இந்த மாதத்தில் என்னெல்லாம் ஸ்பெஷல் இருக்கு தெரியுமா?
வரி வட்டி திரை கிஸ்தி.. திரையில் முழங்கிய நடிப்புச் சிங்கம்.. சிவாஜி கணேசன் - !
புரட்டாசி விரதம்.. ஒரு நிமிடக் கதை (24)
SOLITARY REPAIR.. மண்டைல ஏறவே இல்லையே ஜோ!
{{comments.comment}}