தைபே: தைவானைச் சேர்ந்த ஷிப்பிங் நிறுவனம் ஒன்று, தனது ஊழியர்களுக்கு போனஸாக, நான்கு வருட சம்பளத்தை மொத்தமாக கொடுத்து அவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தைவானைச் சேர்ந்த எவர்கிரீன் மெரைன் கார்ப்பரேஷன் என்ற ஷிப்பிங் நிறுவனத்தில், வருடக் கடைசியில் போனஸ் வழங்கப்படுவது வழக்கம். இந்த முறை ஊழியர்கள் எதிர்பாராத வகையிலான போனஸைக் கொடுத்து அந்த நிறுவனம் அவர்களை திக்குமுக்காட வைத்துள்ளது. அதாவது 50 மாத சம்பளத்தை அப்படியே போனஸாக கொடுத்துள்ளது அந்த நிறுவனம். இது 4 வருட சம்பளத்திற்குச் சமமாகும்.
அதேசமயம், மொத்த ஊழியர்களுக்கும் இந்த போனஸ் தரப்படவில்லை. மாறாக தைவானைச் சேர்ந்த ஊழியர்களுக்கு மட்டும் இது தரப்பட்டுள்ளதாம். யாருக்கெல்லாம் போனஸ் தரப்பட்டது என்ற விவரத்தையும் அந்த நிறுவனம் வெளியிடவில்லை.
கடந்த இரண்டு வருடமாக இந்த நிறுவனம் நல்ல லாபம் ஈட்டி வருகிறதாம். கொரோனா காரணமாக தொய்வடைந்திருந்த நிறுவனத்தின் வர்த்தகம் தற்போது சூடு பிடித்திருப்பதால் வருமானமும் அதிகரித்துள்ளது. இதனால் அதன் பலனை ஊழியர்களுக்குக் கொடுத்துள்ளது இந்த நிறுவனம். கடந்த ஆண்டு இந்த நிறுவனத்தின் வருவாய் 20.7 பில்லியன் டாலராக இருந்ததாக கூறப்படுகிறது. இது 2020ம் ஆண்டை விட 3 மடங்கு அதிகமாகும்.
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
Folk Song: அத்தனையும் பீரோவிலே இருக்கு .. அப்புறம் எதுக்கு இத்தனை புடவை ஒனக்கு!
நீ கேட்டு எதை மறுத்திருக்கிறேன் என்னவளே?
நாடாத நட்பும் கெடும்.. ஔவையின் பொன்மொழி 60
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
தூத்துக்குடி முத்து போல!
எனக்கும் கடிதம் வந்தது!
{{comments.comment}}