சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக அண்ணாசாலை முழுவதும் போக்குவரத்து பாதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இன்று முதல் இந்த மாற்றம் செய்யப்பட உள்ளதாக போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது. முதலில் சோதனை ஓட்டம் செய்யப்பட உள்ளதாகவும், அதில் உள்ள நிறை குறைகைளை வைத்து மேலும் மாற்றம் செய்யப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மித் சாலை முழுமையாக ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது. அண்ணாசாலை டு ஸ்மித் சாலை சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் சாலை செல்லலாம். அதேசமயம், ஒயிட்ஸ் சாலை டு ஸ்மித் சாலை சந்திப்பில் இருந்து அண்ணா சாலை செல்ல அனுமதி இல்லை.
பட்டுல்லாஸ் சாலை ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது. ஒயிட்ஸ் சாலை டு பட்டுல்லாஸ் சாலை சந்திப்பில் இருந்து அண்ணா சாலை செல்லலாம். அண்ணா சாலை டு பட்டுல்லாஸ் சாலை சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் சாலை செல்ல அனுமதி இல்லை.
ஜி.பி.ரோடு சந்திப்பு மற்றும் பின்னி சாலையில் இருந்து அண்ணா சாலை வந்து ஒயிட்ஸ் ரோடு நோக்கி செல்லும் வாகனங்கள் பட்டுல்லாஸ் சாலை வழியாக செல்ல அனுமதி இல்லை. நேராக ஸ்மித் ரோடு சந்திப்பு சென்று இடது புறம் திரும்பி ஸ்மித் ரோடு, ஒயிட்ஸ் ரோடு சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

ராயப்பேட்டை மணிக்கூண்டு சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் ரோட்டில் வந்து அண்ணா சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் பட்டுல்லாஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி பட்டுல்லாஸ் சாலை, அண்ணா சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம். ஸ்மித் ரோடு வழியாக செல்ல அனுமதி இல்லை.
திரு.வி.க. டு ஒயிட்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் ரோட்டில் வந்து அண்ணா சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் ஸ்மித் ரோடு வழியாக செல்ல அனுமதி இல்லை. நேராக பட்டுல்லாஸ் சாலை சந்திப்பு சென்று இடது புறம் திரும்பி பட்டுல்லாஸ் சாலை. அண்ணா சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
அண்ணாசாலை டு பட்டுல்லாஸ் சாலை சந்திப்பில் இருந்து பின்னிசாலை மற்றும் பிராட்வே நோக்கி செல்லும் வாகனங்கள் இடது புறமாக திரும்பி அண்ணா சாலையில் ஸ்பென்சர் எதிர்புறம் உள்ளே யு டர்ன் போட்டு திரும்பி பின்னி சாலை மற்றும் பிராட்வே நோக்கி செல்லலாம்.
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}