சென்னை: மரணத்திலும் கூட காசு பார்க்க நினைப்பதா.. ஒருவரின் மரணத்தைக் காட்டினால் பார்வையாளர்கள் கிடைப்பார்கள் என்பது இரக்கமற்றது, கொடியது. இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
பிரபலங்களின் மரணங்களை இப்போது எல்லாம் பல்வேறு காட்சி ஊடகங்களிலும், யூடியூப் சானல்களிலும் போட்டி போட்டிக் கொண்டு நேரலை செய்ய ஆரம்பித்து விட்டனர். குடும்பத்தினரின் அழுகையை நேரலையாக காட்ட பலரும் துடிக்கிறார்கள். அவர்களது வீட்டில் வேலை பார்க்கும் வேலையாட்களைத் தேடிப் பிடித்து பேட்டி எடுக்கிறார்கள். துக்க வீட்டுக்கு வரும் பிரபலங்களையும் சும்மா விடுவதில்லை. அவர்கள் முன்பு மைக்குகளை நீட்டி பேட்டி கேட்பதும் பேஷனாகி விட்டது.

துக்க வீடுகளுக்குள் புகும் கேமராக்கள் செய்யும் அட்டகாசங்கள் பல நேரங்கள் வெறுப்பையும், எரிச்சலையும் ஏற்படுத்துகின்றன. வீடுகளோடு இவர்கள் நிற்பதில்லை. மயானத்திலும் கூட குவிந்து விடுகிறார்கள். அங்கு நடக்கும் சாங்கியங்களை ஒன்று விடாமல் லைவ் செய்கின்றனர். பின்னணியில் இசையை வேறு போட்டுக் கொண்டு நடக்கும் இந்த அக்கப்போர்கள் சமீப காலமாக கண்டனங்களை எழுப்ப ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் இந்தப் போக்கை தமிழ் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டித்துள்ளது. இதுகுறித்து சங்கத் தலைவர் டிஜி. தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மரணம் என்பது எல்லோருக்கும் நிகழக்கூடிய ஒன்று. அது இயற்கையின் தீர்மானத்திற்கு உட்பட்டது என்பதை இவ்வுலகில் பிறந்த எல்லா உயிர்களும் அறியும். ஆறறிவு கொண்ட மனிதன் இன்னும் சற்றே அதிகமாகவே அதை உணர்ந்தவன்.
மரண வீடுகள் மௌனிக்கப்படவும் துயரத்தை பகிர்ந்து கொள்ளவும் துயர் கொள்ளவும் வேண்டியவை. யாரோ இறந்து போனார்.. எனக்கும் அவருக்கும் என்ன.. ஒருவரின் அழுகையோ துயரத்தை வெளிப்படுத்தும் விதத்தையோ ஏன் இவ்வளவு வெட்ட வெளிச்சமாக்க வேண்டும்? ஒருவரின் துயர் நமக்கு காசாகத்தான் வேண்டுமா? பார்வையாளர்களைக் கொண்டு வரும் என்ற எண்ணம் எத்தனை இரக்கமற்றது கொடியது.
நாம் மற்றொருவரின் மரணத்தையோ இயலாமையையோ கொண்டாடும் மனநிலைக்கு வந்து விட்டோமோ என்ற கவலை வலுக்கிறது. ஊடகங்கள் கார்களின் உள்ளேயும் நடுவீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் உடலையும் ஏன் படம் பிடிக்க வேண்டும்? அதுவும் முண்டியடித்துக் கொண்டு துக்கமுக முகங்களை காட்டுவதில் அப்படி என்ன பேரானந்தம் கிடைத்துவிடப் போகிறது?
இனிவரும் காலங்களில் ஊடக அனுமதி இறப்பு வீடுகளில் கூடவே கூடாது என்பதை முன்னெடுக்க வேண்டும். அனைத்து பத்திரிகையாளர் சங்கங்களும் பத்திரிக்கை தொடர்பாளர் யூனியனும் இணைந்து இதற்கு ஒரு நல்ல தீர்வை காண்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
சக மனிதர்களின் இழப்பை நம் வீட்டு இழப்பாக கருதி துயர் விசாரிக்க வரட்டும், கையில் கேமரா இல்லாமல். இனிவரும் காலங்களில் இச்செயல் முற்றிலும் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து ஊடகங்களுக்கும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோளை வைக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளர்.
பிரைவசி என்பதையே இன்றைய காட்சி ஊடகங்கள் மறந்து விட்டனவோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. நேற்று கூட நடிகர் மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த ஒரு பிரபலத்தையும் இவர்கள் விடவில்லை. கேமராவுடன் துரத்தியதைப் பார்க்க முடிந்தது. குறிப்பாக நடிகர் விஜய் வந்தபோது அப்படி ஒரு கூட்டம். அவரைப் பார்க்க வந்த ரசிகர்கள் ஒருபக்கம், அவரைப் பேட்டி காண கூடிய மீடியாக்கள் கூட்டம் மறுபக்கம்.. ஏன் இப்படி ஒரு தள்ளுமுள்ளு என்று முகம் சுளிக்கும் அளவுக்குத்தான் இவர்களின் செயல்பாடுகள் உள்ளன.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}