தனுஷ், விஷால், சிம்புவுக்கு ரெட் கார்டு?... அதிரடி காட்டும் தயாரிப்பாளர் சங்கம்

Sep 15, 2023,02:48 PM IST

சென்னை : தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களான தனுஷ், விஷால், சிம்பு மற்றும் அதர்வா ஆகியோருக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ரெட் கார்டு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றிய பேச்சுக்கள் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


தமிழ் திரையுலகை சேர்ந்த பல நடிகர்கள் மீது, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருந்துள்ளது.  இந்த புகார்கள் தொடர்பாக சிம்பு, விஷால், எஸ்.ஜே.சூர்யா,அதர்வா, யோகிபாபு உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஜூன் மாதமே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில், இதே போன்று தொடர்ந்து புகார்கள் வந்தாலோ, தயாரிப்பாளர்கள் உடனான பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணாவிட்டால் ரெட் கார்டு விதிக்கப்படும், கோலிவுட் தயாரிப்பாளர்கள் யாருடனும் பணியாற்ற தற்காலிகமாக தடை விதிக்கப்படும் என்பத உள்ளிட்ட பல எச்சரிக்கைகள் அந்த நோட்டீசில் இடம்பெற்றுள்ளது. 


ஆனால் இதற்கு சம்பந்தப்பட்ட நடிகர்கள் சார்பில் பெரிதாக எந்த ரியாக்ஷனும் இல்லை என சொல்லப்படுகிறது. இருந்தாலும் அவர்கள் மீது தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருந்ததால் கடந்த சில நாட்களுக்கு முன் ரெட் கார்டு விதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. 


அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் போது 60 நாட்கள் நடிப்பதாக சொல்லி விட்டு 27 நாட்கள் மட்டுமே நடித்து கொடுத்ததாக சிம்பு மீது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் புகார் அளித்திருந்தார். இந்த விவகாரம் தற்போது வரை சரி செய்யப்படாதது தொடர்பாக தற்போது சிம்புவிற்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.


இதே போல் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தில் ஒப்புக் கொண்டது போல் படத்தை முடித்து கொடுக்காமல் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக தனுஷிற்கும், நடிகர் சங்க தலைவராக இருந்த காலத்தில் சங்கத்தின் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக விஷாலுக்கும், தயாரிப்பாளர் மதியழகன் விவகாரம் தொடர்பாக அதர்வாவிற்கும் ரெட் கார்டு போடப்பட்டதாக சொல்லப்படுகிறது.


இப்போது இந்த நடிகர்களுக்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டுள்ளதால் இந்த விவகாரம் முடியும் வரை அந்த நடிகர்களின் படங்கள் எதுவும் ரிலீஸ் செய்யப்படாது. இவர்கள் புதிய படங்கள் எதிலும் நடிக்கவும் முடியாது. விஷால் நடித்த மார்க் ஆன்டனி படம் செப்டம்பர் 15 ம் தேதியான இன்றும், தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் டிசம்பர் 15 ம் தேதியும் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ரெட் கார்டு விவகாரத்தால் இந்த படங்களில் ரிலீஸ் என்ன ஆகும் என ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்