- முனைவர் வி.புவனேஸ்வரி
தமிழ்மொழி பன்முகத்தன்மை கொண்டது. காலத்திற்கேற்ப தம்மை தகவமைத்துக் கொள்ளும் இயல்புடையது. நம் அன்றாட வாழ்வில் தொழில்நுட்பத்தின் தேவை மற்றும் அவசியமென்பது அத்தியாவசியமானது. இணையம் பன்முகத்தன்மையுடையது. வாழ்வில் அனைத்து நிலைக்கலன்களுக்கும் பயன்படத்தக்கது. தமிழ்மொழி மற்றும் கலாச்சாரத்தை மூலம் பாதுகாத்து வருங்கால தலைமுறையினருக்கு எளிமையாக நம் பண்பாடு மற்றும் நாகரீகத்தைக் கற்றுக்கொள்ள உதவுவது நம் கடமையாகும்.
எண்ணற்றவை இருப்பினும் தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்க்கக் கூடிய சில.. Tamil E-Publishing, Mobile App For Learning Tamil through Literature, Tamil Audio book and Pod-cast Platform, Tamil Literary Heritage Archival Center, Tamil Literary Tourism PlatForm, Research Tool For Scholars, AI + Art form Tamil Literature போன்ற இணைய வழி செயல்பாடுகள் தமிழ்மொழியின் வளமையைக் கூட்டுவதற்குப் பயன்படும் என்பதனை புலப்படுத்தும் வாயிலாக இக்கட்டுரையானது அமைகிறது.
தமிழ் மின்னூல் புத்தகம் (Tamil E-Publishing Platform)
தமிழ் மின்-புத்தகம் என்பது தமிழ் எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை மின் புத்தகம் மற்றும் ஆடியோ புத்தகம் வடிவங்களில் சுயமாக வெளியிட, விநியோகம் செய்ய, பணமாக்க அதிகாரம் அளிக்கும் ஒரு டிஜிட்டல் வெளியீட்டு தளமாகும். உலகளாவிய தமிழ் பேசும் பார்வையாளர்களை அணுகுவதன் மூலம் தமிழ் இலக்கியத்தை உலகறியச் செய்வதை இத்தளத்தின் நோக்கமாகும்.
தமிழ் மின்னூல் புத்தகம் வடிவமைப்பதன் நோக்கம்:
இணைய யுகத்தில் தமிழ்மொழி, இலக்கியம் முதலியவற்றை பாதுகாத்து ஊக்குவிக்கும் முன்னணி தமிழ் இணைய வெளியீட்டு தளமாக மாறுவதே இதன் நோக்கமாகும். தமிழ்வாசகர்கள் டிஜிட்டல் வடிவங்களில் தரமான தமிழ் இலக்கியங்களை அணுகுவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். தமிழ் எழுத்தாளர்களுக்கு குறிப்பாக புதிய மற்றும் பிராந்திய குரல்களுக்கு வரையறுக்கப்பட்ட வெளியீட்டு வாய்ப்புகள் குறைவாக உள்ளதே இத்தகைய டிஜிட்டல் தளம் வளர்ச்சியடைவதில் நாம் எதிர்கொள்ளும் சிக்கலாகும்.
பாரம்பரிய புத்தக வெளியீட்டு முறை என்பது விலை உயர்ந்தது மற்றும் அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. டிஜிட்டல் தளத்தை பயன்படுத்துவதன் மூலம் நேர விரயத்தை குறைக்க முடியும். மேலும் புத்தக வெளியீட்டு வாய்ப்புகளை எளிமையாகவும் மிக விரைவிலும் செய்து முடிக்கலாம். வலைத்தளம் மற்றும் மூன்றாம் தரப்பு தளங்கள் (அமேசான், கிண்டில், கூகிள்) வழியாக மின்-புத்தகங்களை விநியோகம் செய்யலாம். ஆசிரியர்களுக்கான சுய வெளியீட்டு டாஷ்போர்டு, பன்மொழி இடைமுகம் கொண்ட தளத்தைக் கட்டமைப்பதன் வாயிலாக எளிமையாக பயனர்கள் தளத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும். தமிழ் மின்னூல் புத்தகத்தை மேம்படுத்துவதன் மூலம் தமிழ் ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் முதலியோர்க்குப் பயனுள்ளதாக அமையும்.
புத்தக விற்பனையில் தள கட்டணம் 30%, வாசகர்களுக்கான சந்தா, ஆசிரியர்களுக்கான சேவை கட்டணம் நிலைகளில் வருவாய் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளும் இத்தகைய டிஜிட்டல் தளத்தில் அமைந்துள்ளது.
தமிழ் கற்க உதவும் மொபைல் செயலிகள் (Mobile App for Learning Tamil through Literature)
AI - Language Models & Chatbot (AI மொழி மாதிரிகள்)
Transliteration & Writing Tools (மொழிபெயர்ப்பு மற்றும் ஒலிபெயர்ப்பு எழுத்து கருவிகள்)
Voice & Content AI in Tamil (குரல் உள்ளடக்கம் தமிழ் AI கருவிகள்)
AI - Language Models & Kural bot (AI மொழி மாதிரிகள்)
சிறப்பு தமிழ் AI கருவிகள் தமிழ் இலக்கியங்களை விளக்குவதற்கும் உச்சரிப்பைக் கற்பிப்பதற்கும் கலாச்சாரத்தை விவாதிப்பதற்கும் பயன்படுகின்றன. எடுத்துக்காட்டாக, (Kuralbot). தமிழ்க் குறள்களைத் தேட, விளக்க, உரையாடல் வடிவில் உதவுகிறது. குறள்களை அறிமுகப்படுத்தி மொழிபெயர்க்கும் வடிவிலும் AI சேவைகளைப் பெறலாம். பயனாளர்க்கு - குறளை ஆங்கிலத்திலும் தமிழிலும் படிக்கவும், தேவைப்படும் குறளை எண் மூலம் உடனடி விளக்கம் பெறவும் இத்தகைய AI சேவைகள் பயன்படும்.
Transliteration & Writing Tools (மொழிபெயர்ப்பு மற்றும் ஒலிபெயர்ப்பு எழுத்து கருவிகள்)
தமிழ் இலக்கியத்திற்கான மொழிபெயர்ப்பு கருவிகள் உருவாக்குவதென்பது தமிழின் இன்றியமையாத இலக்கியப் பாரம்பரியத்தை டிஜிட்டல் வடிவத்தில் அணுகுவதை மேம்படுத்துதல் இன்றியமையாததாகும். தமிழ்மொழி எவ்வாறு ஒலிக்கிறது மற்றும் சொற்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதை புரிந்து கொள்ள தமிழ்க் கற்பவர்களுக்கு ஒலிபெயர்ப்பு கருவிகள் பயனுள்ளதாக அமையும்.
மொழி கற்றலை மேம்படுத்துவதிலும், தமிழ் அல்லாத மொழி பேசுபவர்கள் குறிப்பாக தமிழ் இலக்கியம் மற்றும் கவிதைகளில் ஆர்வம் உள்ளவர்கள் உச்சரிப்பு, நடை மற்றும் இலக்கணத்தைப் புரிந்து கொள்ள மொழிபெயர்ப்பு கருவிகள் பயனுள்ளதாக அமையும்.
Voice & Content in Tamil (குரல் உள்ளடக்கம் தமிழ் கருவிகள்)
தமிழ் இலக்கிய உலகில் குரல் உள்ளடக்கத்தையும் செயற்கை நுண்ணறிவையும் இணைக்கும் ஒரு யோசனை என்பது அளப்பரியது. ஆடியோ புத்தகம் என்கிற சேவையாக இத்தகைய தளத்தை வடிவமைக்கலாம். கவிதை அல்லது கதைகளைப் பகுப்பாய்வு செய்தால் இலக்கியத்தில் உள்ள உணர்ச்சிகள் அல்லது கருப்பொருட்களைக் கண்டறிந்து, குறள் உள்ளிட்டு கருவிகளைப் பயன்படுத்துபவர்களுடன் நுண்ணறிவை பகிர்ந்து கொள்ள முடியும்.
தமிழ் ஆடியோ புத்தகம் மற்றும் பாட்காஸ்ட் தளம் (Tamil Audio Book & Pod-cast Platform)
தமிழ் ஆடியோ புத்தகம் மற்றும் பாட்காஸ்ட் தளம் பிராந்திய மொழி உள்ளடக்கம் மற்றும் குரல் சார்ந்த ஊடகங்களுக்கான தேவை அதிகரித்து வருவதால் இத்தகு சேவை பெரிதளவில் பயன்படுகிறது. தமிழ் ஆடியோ புத்தக நூலகம் உருவாக்குவதன் மூலம் செம்மொழி தமிழ் இலக்கிய கவிதைகள், கல்கி, பாரதியார் போன்றவர்களின் படைப்புகளைக் குரல் வடிவில் பதிவேற்றி மாணவர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் பயன்படும் வகையில் அமைக்கலாம்.
பாட்காஸ்ட் தளம் (Pod- cast Platform)
தமிழ் இலக்கிய விவாதங்கள், ஆசிரியர்களுடன் நேர்காணல், நவீன கதை சொல்லல் என கேட்டல் - சொல்லாற்றல் அடிப்படையில் பயன்படும் விதமாக அமையும்.
தமிழ் இலக்கியப் பாரம்பரிய ஆவணக் காப்பக மையம் (Tamil Literary Heritage Archival Center)
தமிழ் இலக்கியப் படைப்புகளை பாதுகாத்தல், தமிழ் பாரம்பரியம் பற்றிய புரிதலை ஊக்குவித்தல், ஆராய்ச்சியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஒரு கல்வி இடத்தை உருவாக்குதல் என்கிற அடிப்படையில் தமிழ் இலக்கியப் பாரம்பரிய ஆவண காப்பக மையம் செயல்பட்டு வருகிறது. தமிழ் இலக்கியம் குறித்த விழிப்புணர்வைப் பரப்புதல் அல்லது பண்டைய நூல்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்தல் என்கிற நிலைகளில் இணைய வழியிலும், நூலக அல்லது பாதுகாப்பாக அமைப்பிலும் பாதுகாக்கலாம்.
நூலக அமைப்பில் பண்டைய சங்க இலக்கியம் முதல் நவீன படைப்புகள் வரை தமிழ் இலக்கியம் தொடர்பான அரிய முக்கிய கையெழுத்துப் பிரதிகள், புத்தகங்கள் மற்றும் கலைப் பொருட்களை ஆதாரமாகக் கொண்டுள்ளது. வாய்மொழி இலக்கியங்கள், தமிழ் இலக்கிய மரபுகள், நாட்டுப்புறக் கதைகள் முதலியவற்றை டிஜிட்டல் காப்பகம் மூலம் பாதுகாக்கலாம். இத்தகைய முறை மூலம் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கான டிஜிட்டல் சேவை மற்றும் பரந்துபட்ட ஆராய்ச்சி அறிவை ஊக்குவிக்க முடியும்.
தமிழ் இலக்கியச் சுற்றுலா தள செயலி (Tamil Literary Tourism Platform – App)
தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தைச் சுற்றியுள்ள பயண அனுபவங்களை நிர்வகிக்கும் ஒரு தளமாக அல்லது செயலியாக உருவாக்கலாம். சுற்றுப்பயணங்கள், மெய்நிகர் வழிகாட்டிகள் மற்றும் பாரம்பரிய நவீன தமிழ் இலக்கியங்களால் ஈர்க்கப்பட்ட கலாச்சார உள்ளடக்கத்தை உருவாக்குவதாக அமைக்கலாம். தமிழ் இலக்கியச் சுற்றுலா செயலி வடிவமைப்பதன் வாயிலாக கலாச்சார மற்றும் அனுபவ சுற்றுலாவின் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யலாம்.
பாடப்புத்தகங்களுக்கு அப்பாற்பட்டு, இலக்கிய மாணவர்கள் மற்றும் அறிஞர்கள் ஈடுபட உதவுகிறது. தொலைதூரக் கல்விக்கு டிஜிட்டல் கற்றல் கருவிகள் மற்றும் AR/VR (Augmented Reality / Virtual Reality) அனுபவங்களை வழங்க முடியும். இத்தகைய செயலிகள் வழிகாட்டிகள், கைவினைக் கலைஞர்கள் மற்றும் சிறு வணிகங்களை ஆதரிப்பதன் மூலமாக உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்தலாம். உள்ளடக்க படைப்பாளர்கள், வரலாற்றாசிரியர்கள், மொழிப்பெயர்ப்பாளர்கள் மற்றும் சுற்றுலா நடத்துபவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.
ஆய்வு மாணவர்களுக்கான ஆராய்ச்சிக் கருவிகள் (Research Tool for Scholars)
தமிழ் பேசும் ஆர்வலர்களுக்கான புத்தொழில் மையம் (Tamil Speaking Hubs) அமைப்பதன் வாயிலாக தமிழாசிரியர்கள், ஆர்வலர்கள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும். இப்புத்தொழில் மையத்தின் வாயிலாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசக்கூடிய திறன்மிக்கப் பட்டதாரிகளை உருவாக்கலாம். தொடக்க நிறுவனங்கள், உள்ளூர் தமிழ் வாடிக்கையாளர்களுடன் எளிதாக ஈடுபடக்கூடிய நிலையும், சந்தைப்படுத்துவதற்கான முறைமையும் உண்டாக்கும்.
தமிழ் மொழி கற்றல் செயலிகள் (Google Data Studio) அல்லது மொழிப்பெயர்ப்பு கருவிகளை உருவாக்கலாம். தமிழ்க்குரல் அங்கீகாரம் (Tamil Voice Assistant) வணிகம், கல்வி, அரசு போன்றவற்றிற்கு பயன்படும் வகையில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட டேஷ்போர்டுகளை உருவாக்கலாம். தமிழ்ப் பேசும் பயனர்கள் தங்கள் தாய்மொழியில் தரவு, பகுப்பாய்வு, அறிக்கைகளை வெளியிட உதவுகிறது.
AI கலை வடிவம் மற்றும் தமிழ் இலக்கியம் (AI + Art form Tamil Literature)
திருக்குறள் முதல் சிலப்பதிகாரம் வரை, பாரதியார் முதல் நவீன தமிழ் நாவல்கள் வரை, தமிழ்ப் பாரம்பரிய மற்றும் நவீன இலக்கியங்களின் கலை விளக்கங்களை மறுகற்பனை செய்யவும், சங்க இலக்கியக் காட்சிகளைக் காட்சிப்படுத்தவும், உருவாக்கவும் AI செயலிகள் உதவுகின்றன. AI மூலம் உருவாக்கப்பட்ட கவிதை மற்றும் உரைநடை தமிழ் நூல்களில் பயிற்சி பெற்ற AI மாதிரிகள், பாரம்பரிய மற்றும் நவீன தமிழ் இலக்கிய மரபுகளில் புதுக்கவிதைகள் அல்லது சிறுகதைகளை உருவாக்க முடியும்.
புதிய கவிதைகள் உருவாக்க, பக்தி இலக்கியம் அல்லது நவீன தமிழ் நாவல்கள் உள்ளிட்ட தமிழ் இலக்கியப் படைப்புகளில் AI பயிற்சி உருவாக்க முடியும். இதன் வாயிலாக கலாச்சார சூழல்கள்,பாரம்பரிய தமிழ் இலக்கிய அழகியலை AI வாயிலாக பிரதிபலிக்க முடியும்.
AI தொழில்நுட்பங்களின் துணைக் கொண்டு, தமிழ் மின்னூல் புத்தகம் (Tamil E-Publishing), தமிழ்க் கற்க உதவும் மொபைல் செயலிகள் (Mobile App For Learning Tamil through Literature), தமிழ் ஆடியோ புத்தகம் மற்றும் பாட்காஸ்ட் தளம் (Tamil Audio book and Pod-cast Platform), தமிழ் இலக்கியப் பாரம்பரிய ஆவணக் காப்பக மையம் (Tamil Literary Heritage Archival Center), தமிழ் இலக்கியச் சுற்றுலா தள செயலி (Tamil Literary Tourism PlatForm), ஆய்வு மாணவர்களுக்கான ஆராய்ச்சிக் கருவிகள் (Research Tool For Scholars), AI கலை வடிவம் மற்றும் தமிழ் இலக்கியம் (AI + Art form Tamil Literature) போன்ற செயல்பாடுகளை மேம்படுத்துவதன் மூலம் தமிழ்மொழியின் வளமையைக் கூட்டுவதற்குப் பயன்படும் என்பதனை புலப்படுத்தும் வாயிலாக இக்கட்டுரையானது அமைகிறது.
தமிழ்மொழி மற்றும் கலாச்சாரத்தை AI மூலம் பாதுகாத்து வருங்கால தலைமுறையினருக்கு எளிமையாக நம் பண்பாடு மற்றும் நாகரீகத்தை இணைய வழிக் கற்றுக்கொள்ள உதவுவது நம் கடமையாகும்.
(முனைவர் வி.புவனேஸ்வரி.. ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் தமிழ்த் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். சிறு வயதிலிருந்தே தமிழ் மொழியின் மீதும் தமிழ் இலக்கியத்தின் மீதும் மிகுந்த பற்று கொண்டவர். கல்லூரி பணியில் ஐந்து ஆண்டு காலம் அனுபவமுள்ளவர். மாணவர்களுக்கு தமிழ் பயிற்றுவித்து அதன் நுணுக்கங்களையும் கற்றுக் கொடுத்து வருகின்றார். கல்லூரியில் செயல்பட்டு வரும் தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளராவும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.. முனைவர் புவனேஸ்வரியை bhuvanaofficial97@gmail.com என்ற மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்)
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை.. சுப்ரீம் கோர்ட்டில் தவெக வழக்கு
தமிழ்மொழியையும், கலாச்சாரத்தையும் காக்க கை கொடுக்குமா AI?
நடிகை நயன்தாராவின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வதந்தி.. போலீஸ் தீவிர சோதனை
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாயமான 4.54 கிலோ தங்கம்.. கோவில் துணை கமிஷனர் சஸ்பெண்ட்!
கேள்வி கேட்டதற்காக வழக்கறிஞரை போட்டுத் தாக்குவீர்களா.. விசிகவுக்கு அண்ணாமலை கண்டனம்
கரூர் சம்பவம்.. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.. பலியான சிறுவனின் தந்தை வழக்கு
உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் தங்கம் விலை.. அயர்ச்சியில் நடுத்தர வர்க்கத்தினர்!
டான்ஸ், ஓவியம்.. திருவள்ளுவர் வேடம் தாங்கி.. திருக்குறள் சொல்லி.. அசத்திய சிறப்புக் குழந்தைகள்!
பொக்கிஷம் (குட்டிக் கதை)
{{comments.comment}}