திமுக தரும் 5 தொகுதிகளை ஏற்பதா? வேண்டாமா? சிபிஎம் அவசர ஆலோசனை

Mar 23, 2026,01:10 PM IST

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் அரசியல் வட்டாரத்தில் சூடுபிடித்துள்ளன. குறிப்பாக, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு (CPM) ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து தற்போது இழுபறி நீடித்து வருகிறது.


திமுக - சிபிஎம் இடையே நிலவும் சூழல் :


நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சுவார்த்தையின் போது, சிபிஎம் தரப்பில் 6 சட்டமன்றத் தொகுதிகள் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கான ஒதுக்கீட்டைக் கருத்தில் கொண்டு, 5 தொகுதிகளை மட்டும் ஏற்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.


சென்னையில் அவசர ஆலோசனை : 




இந்த நிலையில், 5 தொகுதிகளை ஏற்பதா அல்லது 6 தொகுதிகள் வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதா என்பது குறித்து முடிவெடுக்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகத்தில் இந்த முக்கியக் கூட்டம் நடைபெற்று வருகிறது. கிட்டதட்ட 6 மணி நேரமாக நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் இதுவரை முடிவு எட்டப்படவில்லை என தெரிகிறது. இந்தக் கூட்டத்தில், 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டால், எந்தெந்தத் தொகுதிகளைக் கேட்பது, கூட்டணியின் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு முதல்வர் முன்வைத்த கோரிக்கையை ஏற்பதா என்பது குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.


அரசியல் முக்கியத்துவம் :


கடந்த 2021 தேர்தலை விட, இந்த முறை கூடுதல் தொகுதிகளைப் பெற வேண்டும் என்பதில் இடதுசாரி கட்சிகள் ஆர்வமாக உள்ளன. 6 தொகுதிகள் என்பது கட்சியின் பலத்தை நிரூபிக்கத் தேவையானது என ஒரு தரப்பினர் வாதிட்டாலும், திமுகவுடனான இணக்கமான உறவைத் தொடர 5 இடங்களே போதும் என்ற கருத்தும் எழுந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், சிபிஎம் தனது இறுதி முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவு தமிழகத் தேர்தல் களத்தில் இடதுசாரிகளின் அடுத்தகட்ட நகர்வைத் தீர்மானிப்பதாக அமையும்.


ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட், விசிக போன்ற கட்சிகள் தாங்கள் கேட்ட சீட்டுகளை விட குறைவான தொகுதிகளையே திமுக தலைமை ஒதுக்கி உள்ளதாக வேதனை தெரிவித்து வருகின்றன. மற்றொரு பக்கம், தாங்கள் கேட்ட சீட்கள் கிடைக்கவில்லை என்பதற்காக தமிழக வாழ்வுரிமை கட்சி, திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்து விட்டது. இத்தகைய குழப்பமான சூழலில் சிபிஎம் என்ன முடிவு எடுக்க போகிறது என்பதை அனைவரும் ஆர்வமாக கவனித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

JCD Prabhakar: சபாநாயகர் பதவிக்குப் போட்டியிடுகிறார் ஜேசிடி பிரபாகர்.. எம்.ஜி.ஆர். காலத்து தலைவர்!

news

கணினி அறிவியல் பாடத்திற்காக வந்த நிதியில் மோசடி.. பட்டதாரி ஆசிரியர்கள் பரபரப்புப் புகார்!

news

தமிழ்நாட்டின் 17-ஆவது சட்டசபை கூடியது.. உளமார உறுதிமொழி எடுத்த முதல்வர் விஜய்

news

N Anand: புஸ்ஸி ஆனந்த்.. இதுவரை வென்றது 2 முறை.. இரண்டு முறையும் வென்றது யாரைத் தெரியுமா?

news

Joseph Vijay Vs Udayanidhi Stalin: சட்டசபை திமுக தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு!

news

Vijay Record: 828 நாட்களில்.. இதுவே முதல் முறை...தமிழக அரசியல் வரலாற்றை மாற்றி எழுதிய விஜய்!

news

CM Vijay: எல்லாமே 10.. விஜய்யின் பதவியேற்பு விழா சென்டிமென்ட்டை கவனிச்சீங்களா?

news

கறுப்பு நிற கோட்டில்.. வித்தியாசமான கெட்டப்பில் பதவியேற்பு விழாவில் விஜய்!

news

CM Joseph Vijay: "C ஜோசப் விஜய் எனும் நான்"... தமிழக முதல்வராக பதவியேற்றார் விஜய்!

அதிகம் பார்க்கும் செய்திகள்