சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் இன்று தவெக அரசின் முதல் சட்டசபைக் கூட்டம் ஆளுநர் ராஜேந்திர ஆர்லேகரின் உரையுடன் தொடங்கியது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஆளுநர் உரை இன்று முழுமையாக ஆளுநரால் படிக்கப்பட்டது.
கடந்த திமுக ஆட்சியில் ஆளுநராக இருந்தவர் ஆர்.என். ரவி. அவர் பதவியில் இருந்தவரை திமுக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து முட்டல் மோதல் இருந்து கொண்டே வந்தது.
குறிப்பாக ஆளுநர் உரை சட்டசபையில் முழமையாக வாசிக்கப்படவே இல்லை. அப்படியே இருந்தாலும் சுருக்கமாக பேசி விட்டு ஆளுநர் போனதே வரலாறாக இருந்தது. தொடர்ந்து ஆளுநர் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்வதும் வழக்கமாக இருந்தது. முழுமையாக ஆளுநர் உரை ஒரு முறை கூட படிக்கப்படவில்லை. அப்படியே படிக்கப்பட்டாலும் கூட சில பகுதிகளை ஆளுநர் தவிர்த்த சம்பவமும் நடந்தது.
இந்த நிலையில் முதல்வர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் முதலாவது சட்டசபைக் கூட்டத் தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தமிழ்நாட்டின் இடைக்கால ஆளுநராக உள்ள ஆர்லேகருக்கும் இது முதல் உரை. இந்த உரை எப்படி இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
இந்த நிலையில், ஆளுநர் ஆர்லேகர் வணக்கம் என்று கூறி தனது உரையைத் தொடங்கினார். அவரது உரை வழக்கத்திற்கு மாறாக முழுமையாக படிக்கப்பட்டது. ஆளுநர் ஆர்லேகர் உரையில் இடம் பெற்றிருந்த அனைத்தையும் ஒரு வரி விடாமல் படித்தார்.

உரையில் தமிழ்நாடு அரசின் லட்சியம், அதன் கொள்கைகள், அதன் திட்டங்கள் உள்ளிட்டவை விலாவாரியாக விளக்கிக் கூறப்பட்டிருந்தது. அதை முழுமையாக ஆளுநர் வாசித்தார். தமிழ்நாட்டில் எப்போதும் இரு மொழிக் கொள்கை தொடரும் என்பதையும் ஆளுநர் எடிட் செய்யாமல் வாசித்தார். காவிரிப் பிரச்சினை குறித்தும் ஆளுநர் உரரையில் இடம் பெற்றிருந்தது.
முதல்வர் ஜோசப் விஜய்யைப் புகழ்ந்தும் உரையில் இடம் பெற்றிருந்தது. அதையும் ஆளுநர் முழுமையாக வாசித்தார். அண்ணா, பெரியார் உள்ளிட்டோர் குறித்தும் உரையில் இடம் பெற்றது. இப்படி ஆளுநர் உரையில் இடம் பெற்ற அனைத்தையும் ஆளுநர் ஆர்லேகர் வாசித்து முடித்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆளுநர் உரை சட்டசபையில் முழுமையாக வாசித்து முடிக்கப்பட்டது வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேபோல சட்டசபைக் கூட்டமும் வழக்கம் போல தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது.
செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்
"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி
Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!
இணையத்தில் செம டிரெண்டிங்.. பரபரக்கும் ‘You+Me - Against the World’ திரைப்பட கிளைமேக்ஸ்!
From Devotion to the stage.. Niranjanaa's Bharatanatyam Arangetram
Poem on Life: வாழ்க்கை!
கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு
இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்
{{comments.comment}}