தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

Oct 13, 2025,01:08 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டசபை கூட்டம் நாளை தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் மூன்று நாட்கள் நடைபெறும். 


முதல் நாளில், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள், நாகாலாந்து முன்னாள் கவர்னர் இல.கணேசன், ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா மற்றும் வால்பாறை உறுப்பினர் அமுல் கந்தசாமி ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, கூட்டம் ஒத்திவைக்கப்படும். தொடர்ந்து, 16, 17, 18 ஆகிய தேதிகளில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும்.


சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர். கூட்டம் முடிந்ததும் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் பேசினார்.




அவர் கூறுகையில், "தமிழக சட்டசபை நாளை கூடுகிறது. முதல் நாளில் கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மறைவுக்கும், மறைந்த நாகாலாந்து முன்னாள் கவர்னர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் சுதாகர் ரெட்டி, ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட இருக்கிறது. தொடர்ந்து, வால்பாறை உறுப்பினர் அமுல் கந்தசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அத்துடன் நாளைய கூட்டம் ஒத்திவைக்கப்படும். 


தொடர்ந்து, 16, 17, 18 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும். அப்போது, 2025-2026-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் பேரவையில் அளிக்கப்படும். ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படும். கேள்வி நேரம் முடிந்ததும் 2025-2026-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும். கடைசி நாளில் 2025-2026-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்படும்" என்று சபாநாயகர் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

சுகந்தி மனசில் மாற்றம்... புது வசந்தம் (3)

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

news

ஜெயிலர் 2.. பிரமாண்ட ஆக்ஷன் திருவிழா.. ரஜினியுடன் இன்னொரு விருந்தும் ரெடியாகப் போகுதாம்!

news

என்னை விட்ருங்க... நான் விலகிக்கிறேன்.. சதானந்தன் மாஸ்டரை அமைச்சராக்குங்க.. சுரேஷ் கோபி

news

என்னய்யா இது... நகை வாங்குறதா வேணாமா?... நகை விலை உயர்வு குறித்து புலம்பி வரும் வாடிக்கையாளர்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்