இப்பதான் "அந்நியன்" படத்துக்கே வந்திருக்கு பாஜக.. டார்கெட் "முதல்வன்".. வித்தியாசமான டீசர்!

Oct 20, 2023,10:52 AM IST

- மஞ்சுளா தேவி


சென்னை:  சினிமா பாணியில் களம் குதித்துள்ளது தமிழ்நாடு பாஜக. முன்பு திமுக பைல்ஸ் என்ற பெயரில் ஒன்றை கையில் எடுத்தது.. தற்போது பாவக் கதைகள் பாணியில் தீமைக் கதைகள் என்ற ஒரு புதிய அஸ்திரத்தை இன்று மாலை ஏவப் போகிறது.


இதற்காக அந்நியன் படப் பாணியில் ஒரு அட்டகாசமான டீசரையும் அது வெளியிட்டுள்ளது. 


அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவராக வந்தது முதலே திமுகவை கடுமையாக தாக்கி வருகிறார். திடீர் திடீரென அதிமுகவுக்கும் ஒரு கும்மாங்குத்து விடுவார். அவரது அரசியலால் திமுக மட்டுமல்லாமல் அதிமுகவும் கூட சேர்ந்தே கடுப்பாகி வந்தது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் திமுக பைல்ஸ் என்ற பெயரில் ஒரு ஊழல் பட்டியலை அவர் வெளியிட்டார். அதாவது திமுக தலைவர்களின் சொத்துக்கள் குறித்த பட்டியல் அது.




ஆனால் அண்ணாமலை, திமுக மீது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை அடுக்குவதாக  புகார் எழுந்தது. நடைபயணம் ஆரம்பிக்கும் முன்பு திமுக பைல்ஸ் பட்டியலை வெளியிட்டிருந்தார் அண்ணாமலை. இந்த பட்டியல் வெளியீட்டைத் தொடர்ந்து  திமுக எம்பி டி.ஆர் பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கை தொடர்ந்தார்.


திமுகவைப் போலவே அதிமுக ஊழல்களையும் வெளியிடுவேன் என்று கூறியிருந்தார் அண்ணாமலை. ஆனால் இதுவரை அவர் வெளியிடவில்லை. அதை வெளியிட மேலிடம் அனுமதி தரவில்லை என்று சொல்கிறார்கள். இந்த நிலையில் தற்போது புதிதாக இன்னொரு சினிமா பாணி பட்டியலுடன் தமிழ்நாடு பாஜக களம் இறங்குகிறது.


இந்தப் "படத்துக்கு" தீமை கதைகள் சீசன் 1 என்று பெயரிட்டுள்ளனர். இதுதொடர்பாக ஒரு டீசரையும் வெளியிட்டுள்ளனர். அந்நியன் படத்தில் வருவதைப் போன்ற வேடத்தில் ஒருவர் வந்து முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று ஆரம்பித்து திமுக அரசு குறித்துப் பேசுகிறார்.. இன்று மாலை 6 மணிக்கு இந்த வீடியோ வெளியாகவுள்ளதாம்.


இந்த வீடியோவில் பாஜக அரசு திமுகவைப் பற்றி என்ன சொல்ல போகிறது என்ற ஆர்வம் மக்களிடையே எழுந்து வருகிறது. இதற்கு முன்பு வெளியிட்ட திமுக பைல் பட்டியல் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை ,

தீமை கதைகள் சீசன் 1 எந்த அளவிற்கு உதவும் என்பதும் தெரியவில்லை. நாமளும் பொறுத்திருந்து பார்ப்போம்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்