சென்னை: போதிய மருத்துவ வசதிகளின்றி அப்பாவிப் பொதுமக்கள் மடிந்து வரும் வேளையில், "உலகமே போற்றும் மருத்துவக் கட்டமைப்பு இது" என்று மேடைகளில் போலியாக பெருமிதம் கொள்வதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெட்கப்பட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், ஆரம்ப சுகாதார நிலையத்தில் 3 மணி நேரமாக மருத்துவர்கள் யாரும் இல்லாததால் கடலூர் மாவட்டம் மங்களூரில் பாம்பு கடித்த விவசாயி ஒருவர் பலியாகிய செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

தமிழகத்தில் கிராமங்கள்தோறும் ஒன்று மருத்துவர்கள் இருப்பதில்லை அல்லது தகுந்த மருத்துவ வசதிகள் இருப்பதில்லை. மருத்துவர்கள் நியமனம் குறித்த கேள்வி எழும்போதெல்லாம் ஏதோ ஒரு எண்ணிக்கையைக் கூறி மழுப்புவதில் மட்டுமே குறியாக இருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள்.
போதிய மருத்துவ வசதிகளின்றி அப்பாவிப் பொதுமக்கள் மடிந்து வரும் வேளையில், "உலகமே போற்றும் மருத்துவக் கட்டமைப்பு இது" என்று மேடைகளில் போலியாக பெருமிதம் கொள்வதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெட்கப்பட வேண்டும்.
விளம்பரத் திட்டங்களை அறிவித்து "நலம் காக்கும் ஸ்டாலின்" என்று பெயர்சூட்டி விளம்பரம் தேடுவதற்கு பதில், ஆட்சி முடியும் தருவாயிலாவது மக்கள் உயிரைப் பாதுகாக்கும் விதமாக அடிப்படை மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும். அது ஒன்று மட்டுமே இதுவரை பல உயிர்களைக் காவு வாங்கி பாவம் புரிந்ததற்குத் தகுந்த பிராயசித்தமாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.
இன்றைக்கு மழை வருமா வராதா? எங்கெல்லாம் மழை வரும்... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!
எடப்பாடி பழனிச்சாமி தான் எங்கள் எதிரி.. ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஒன்றிணைந்து பகிரங்க பேட்டி
கரூர் அதிர்ச்சியிலிருந்து மீண்டுட்டாரா விஜய்.. சிறப்பு பொதுக்குழுவால்.. தொண்டர்களிடையே உற்சாகம்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
இந்தியாவில்.. தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 14 லட்சம் பெண் பிரதிநிதிகள்.. பி.வில்சன் பெருமிதம்
திமுக ஆட்சியில் மருத்துவர் இல்லாததால் தொடரும் உயிர்பலி: நயினார் நகேந்திரன் வேதனை!
தேவர் ஜெயந்தி விழா... முத்துராமலிங்க தேவருக்கு மனமார்ந்த அஞ்சலி: பிரதமர் மோடியின் பதிவு!
சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்த அய்யா முத்துராமலிங்கத் தேவர்: விஜய்
கல்வித்துறையில் தமிழகத்தை மிகவும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளியுள்ளது திமுக அரசு: அண்ணாமலை
{{comments.comment}}