சென்னை: புதிய தமிழ்நாடு பாஜக தலைவரை தேர்வு செய்ய வருகிற 17ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளருமான கிஷன் ரெட்டி.
பாஜகவின் உட்கட்சி தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். அந்த வகையில், தற்போது பாஜக கட்சியின் உட்கட்சி தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பாஜக மாநிலத் தலைவர்கள் மற்றும் தேசிய கவுன்சில் உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான பொறுப்பாளர்களை பாஜக தலைமை நியமனம் செய்திருக்கிறது.
தமிழ்நாடு பாஜகவுக்கு புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்காக மத்திய அமைச்சரும், தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளராக இருக்கும் கிஷன் ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்காக வருகிற 17ம் தேதி சென்னை வருகிறார் கிஷன் ரெட்டி என தகவல்கள் பரவி வருகின்றன. கிஷன் ரெட்டி மாநிலத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை மேற்கொண்டு புதிய தலைவர் யார் என்பதனை பாஜக தலைமைக்கு தெரிவிப்பார் என்றும், அதன்பின்னர் புதிய தலைவர் யார் என்பது தெரிய வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தான் பாஜக தமிழக தலைவர் தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி நயினார் நாகேந்திரன் அல்லது வானதி சீனிவாசன் ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தற்போதைய தலைவராக இருக்கும் அண்ணாமலை மீண்டும் தலைவராக தொடர்வது குறித்து, தேசிய தலைமை இன்னும் முடிவு தெரிவிக்காமல் உள்ளது.
தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுகவிற்கும் இடையே கருத்து மோதல்கள் தொடர்ந்து வருவதால், அண்ணாமலை அடுத்த தலைவராக இருக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவித்து வருகின்றன. அதேசமயம், தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால், அவரை மாற்ற வேண்டுமானால், அவரை விட அதிக தாக்கத்தைத் தரக் கூடியவரையே புதிய தலைவராக்க முடியும் என்ற நெருக்கடியும் உள்ளது.
புதிய தலைவரை வைத்து தான் அதிமுகவுடன் பாஜக சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்குமா? இல்லையா? என்பது தெரிய வரும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில்.. இன்று 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு.. நாளை 5.. வானிலை மையம் தகவல்
பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் பேராபத்து.. உதயநிதி ஸ்டாலின் கருத்து
நடிகர் விஜய் இந்தியா கூட்டணியில் வந்து சேரலாம்.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை யோசனை!
வெகுவிரைவில் மக்கள் திமுக ஆட்சியை புறக்கணிப்பார்கள்.. பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
இந்த வருடம் நாங்கள் ஏன் சர் ஜான் மார்ஷல் பொங்கல் என்று கொண்டாடினோம்?
Taste Atlas most hated foods 2025.. லிஸ்ட்டுல உப்புமா இல்லை.. பஞ்சாபி மிஸ்ஸி ரொட்டிக்கு 56வது இடம்!
சாம்பியன்ஸ் டிராபி 2025.. இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ.. துணை கேப்டனானார் சுப்மன் கில்!
Budget 2025.. ஜன. 31 முதல் பிப். 13 வரை பட்ஜெட் கூட்டத்தொடர்.. பிப். 1ல் பட்ஜெட் தாக்கல்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பு மனுக்கள் ஏற்பு!
{{comments.comment}}