சென்னை : தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் முக்கிய ஆதாரமாக லஞ்ச ஒழிப்பு துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ தங்கம், வைர, வெள்ளி நகைகள் கோர்ட் உத்தரவுப்படி தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த நகைகளைப் பெற்றுக் கொள்ள பெட்டிகளோடு வருமாறு பெங்களூரு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
1996ம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் சோதனை நடத்தினர். இப்போது 27 கிலோ தங்க, வைர நகைகள், 800 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டு, சென்னை ரிசர்வ் வங்கி கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்தது. பிறகு இந்த வழக்கு கர்நாடகாவிற்கு மாற்றப்பட்டதால் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் அனைத்தும் கோர்ட் பாதுகாப்பில் கர்நாடக கருவூலத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தன.

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் 2014ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டதுடன் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜெயலலிதாவிற்கு ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டதில், அனைவரும் விடுவிக்கப்பட்டனர். பிறகு இந்த வழக்கில் அரசு தரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் மேற்முறையீடு செய்யப்பட்டதில், 2017ம் ஆண்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. ஆனால் 2016ம் ஆண்டே ஜெயலலிதா இறந்து விட்டதால் அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதத்தை வசூலிக்கும் வகையில் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அசையும், அசையா சொத்துக்களை ஏலம் விட கோர்ட் அறிவித்தது. ஆனால் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகளில் 7 கிலோ தங்கம் அவரது தாய் அவருக்கு பரிசாக வழங்கிய பாரம்பரிய நகைகள் என்பதால் அவற்றை ஏலம் விடக்கூடாது என கோட்டில் கோரிக்கை வைக்கப்பட்டதால் நகைகளை ஏலம் விடும் முடிவை கோர்ட் கை விட்டது.
இதற்கிடையில் ஜெயலலிதாவின் உறவினர்கள் என்ற முறையில் அந்த நகைகளில் தங்களுக்கு பங்கு உண்டு என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் சார்பில் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அவர்களுக்கு இதில் உரிமை கிடையாது என மனுக்களை தள்ளுபடி செய்தது கோர்ட். அதோடு ஜெயலலிதாவின் நகைகளை ஏலம் விடுவதற்கு பதிலாக தமிழக அரசிடம் ஒப்படைக்கலாம், இது தொடர்பான வழக்கு நடத்தியதற்கான செலவை ஜெயலலிதாவின் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளலாம் என உத்தரவிடப்பட்டது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ நகைகள், 1562 ஏக்கர் நிலப்பத்திரம் ஆகியவற்றை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க கர்நாடக அரசுக்கு பெங்களூரு நகர நீதிமன்றம் உத்தவிட்டதால் 21 ஆண்டுகளுக்கு பிறகு ஜெயலலிதாவின் நகைகள் தமிழகம் கொண்டு வரப்பட உள்ளது. கோர்ட் உத்தரவான, பிப்ரவரி 14, 15 தேதிகளில் ஒப்படைக்க வேண்டும்.
அன்றைய தினம் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், பெட்டிகளுடன் வர வேண்டும். அவற்றை கொண்டு செல்ல உரிய வாகன, பாதுகாப்பு வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். பொருட்கள் எடுத்துச் செல்லும் போது அதனை மதிப்பீடு செய்ய மதிப்பீட்டாளர்கள் இருக்க வேண்டும். ஒட்டுமொத்த நடைமுறையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்பதின் படி ஜெயலலிதாவின் நகைகளை தமிழகம் கொண்டு வர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நகைகள் தமிழக கருவூலத்தில் வைக்கப்பட்டு, அரசின் சார்பில் பாதுகாக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}