TN Assembly Elections: தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2026.. 7150 பேரின் வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை

Apr 07, 2026,06:45 PM IST

சென்னை: தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்யும் பணி விறுவிறுப்பாக நிறைவடைந்துள்ளது. தமிழகம் முழுவதிலும் உள்ள 234 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 7,150 பேர் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.


முதல்வர் மு.க.ஸ்டாலின் (கொளத்தூர்), துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் (சேப்பாக்கம் திருவல்லிக்கேணி), தவெக தலைவர் விஜய் (பெரம்பூர்) ஆகியோரின் வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனைக்குப் பின்னர் ஏற்கப்பட்டன.


தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கடந்த சில நாட்களாகவே அந்தந்த தொகுதிக்குட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் வந்து மனுக்களைத் தாக்கல் செய்து வந்தனர். முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் இந்தப் பணியில் ஈடுபட்டனர். 


நேற்றுடன் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில், தற்போது வேட்புமனு தாக்கல் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி, தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 7,150 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.




தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை துவங்கி, தற்போது நடைபெற்று வருகிறது. வேட்பாளர்களின் சொத்து விவரங்கள், குற்றப் பின்னணி மற்றும் ஆவணங்களின் உண்மைத்தன்மை ஆகியவை தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற விரும்புவோருக்கான கால அவகாசம் முடிந்த பிறகு, வரும் ஏப்ரல் 9-ம் தேதி அன்று அந்தந்த தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


மனுத் தாக்கல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லத் தயாராகி வருகின்றன. ஏப்ரல் 9-ம் தேதி இறுதிப் பட்டியல் வெளியானதும், சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்டு, தேர்தல் களம் இன்னும் பரபரப்பாகும்.வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையைச் சிறப்பாக ஆற்றவும், தேர்தல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றவும் தேர்தல் ஆணையம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக அமோக வெற்றி.. விஜய்யின் அடுத்த மூவ் என்ன?

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்...திமுக.,வுக்கு லாபமா.. நஷ்டமா?

news

3வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக.. கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை இழக்கும் இரட்டை இலை!

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலில்.. மொத்தமாக சரிந்து போன நாம் தமிழர் கட்சி!

news

Jo's quick Film review: "பத்தா".. மினிமம் 10 முறையாவது பார்க்க வேண்டும்!

news

2026 அமைதிக்கான நோபல் பரிசு: தமிழ் வம்சாவளி மனித உரிமை வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு!

news

சமையல் With ஸ்வர்ணா.. கொங்கு நாட்டு பாரம்பரிய சந்தகை!

news

6 அதிமுக எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு

news

டெல்லியில் கரப்பான் ஜனதா கட்சி போராட்டம்: மெட்ரோ மற்றும் ரயில் சேவைகள் முடக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்