டெல்லி: இலங்கை கடற்படையின் ரோந்து படகு மோதி தமிழக மீனவர் உயிரிழந்தது தொடர்பாக டெல்லியில் உள்ள இலங்கை பொறுப்பு தூதரை அழைத்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து 400 விசைப்படகுகளில் 2000த்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். தமிழக மீனவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் ரோந்து வந்துள்ளனர். இலங்கை கடற்படையினரை கண்டதும் தமிழக மீனவர்கள் விசைபடகுகளை கரைக்கு வேகமாக திருப்பியுள்ளனர். அப்போது மீனவர்களின் விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் விடாது துரத்தி வந்துள்ளனர்.
இதில், கார்த்திகேயன் என்பவரது படகு மீது இலங்கை கடற்படையினரின் ரோந்து படகு மோதியதில், கார்த்திகேயனின் படகு முழுவதும் நடுக்கடலில் மூழ்கியது. கார்த்திகேயன் படகில் சென்ற 4 பேரில். மலைச்சாமி என்பவர் கடலில் மூழ்கி இறந்துள்ளார். முத்து முனியாண்டி, மூக்கையா ஆகியோர் காயங்களுடன் மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாயமான ராமச்சந்திரனை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறலால், தமிழக மீனவர்கள் உயிரிழந்து இருப்பதாக மத்திய அரசு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. டெல்லியில் உள்ள இலங்கை தூதரக அதிகாரியை நேரில் அழைத்து மத்திய அரசு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும், உயிர் இழந்த மீனவர் மற்றும் காயம் அடைந்து காங்கேசன் துறையில் தங்க வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்யவும் அறிவுறுத்தல் செய்துள்ளது.
2024ம் ஆண்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது.. சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்!
சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு.. பரிசுத்தொகையை அள்ளிக் கொடுத்த.. பிசிசிஐ!
தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு.. மழை பிளஸ் வெயில் இதுதான் நிலவரம்..!
டாஸ்மாக் விவகாரத்தில்.. அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க தடை.. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு!
கொலை பட்டியல் தான் திமுகவின் சாதனை.. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கு!
15 சிலிண்டருக்கு மேல் பயன்படுத்த கட்டுப்பாடு விதித்த.. இந்திய எண்ணெய் நிறுவனம்..!
Govt jobs vacancy: போக்குவரத்து துறையில்.. 3,274 காலிப் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
நாதக... இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக... வீரப்பன் மகள் வித்யாராணி நியமனம்
மார்ச் 22.. மக்கள் நீதி மய்யம் .. கமல்ஹாசன் தலைமையில் செயற்குழு, நிர்வாகக் குழு கூட்டம்!
{{comments.comment}}