சென்னை: கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படத்திற்கான சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
36 வருடங்களுக்குப் பிறகு பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் தக் லைஃப். இப்படத்தில் நடிகர் சிம்பு முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
தக் லைஃப் படத்திற்கு சென்சார் போர்டு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. 2 மணி நேரம் 45 நிமிடம் கொண்ட இப்படம் ஜூன் 5-ஆம் தேதி (நாளை) வெளியாகவுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. ட்ரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் 20 மில்லியன் பார்வைகளை கடந்து இணையத்தில் வைரலானது. அதே சமயத்தில் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்த காத்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த பட விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்து தான் கன்னட மொழி வந்ததாக பேசினார். இது பெரும் சர்ச்சையயும், எதிர்ப்பையும் கிளப்பியது. இந்த நிலையில், கர்நாடக உயர்நீதிமன்றம் கமல்ஹாசனை மன்னிப்பு கேட்கும் படி உத்தரவிட்டது. இதற்கு கமல்ஹாசன் தரப்பில் தவறு செய்திருந்தால் தானே மன்னிப்பு கேட்க முடியும். தவறுதலாக புரிந்து கொண்டதற்கு எப்படி மன்னிப்பு கேட்க முடியும் என்ற வாதத்தை முன்வைத்தது. இதையடுத்து கர்நாடக அரசு, கன்னட திரைப்பட வர்த்தக சங்கம், கமல்ஹாசன் தரப்பு பேச்சுவார்த்தை நடத்துமாறும், அதில் உடன்பாடு ஏற்படும் வரை படம் திரையிட முடியாது என்றும் உத்தரவிட்டு, ஜூன் 10ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
இந்த நிலையில், நாளை வெளியாகும் தக் லைஃப் படத்திற்கு , நாளை ஒருநாள் மட்டும் தமிழகத்தில் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நாளை காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 2 மணிக்குள் முடிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பால் கமல் ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}