சென்னை: சென்னை கடற்கரை உழைப்பாளர்சிலை அருகே நடந்த குடியரசு தின விழாவில், தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். காவல் துறை அணிவகுப்பையும் அவர் ஏற்றுக் கொண்டார்.
சென்னையில் வழக்கமாக மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகே குடியரசு தினவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது மெட்ரோ பணிகள் நடைபெறுவதன் காரணமாக, உழைப்பாளர் சிலை அருகே இந்த ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.
இன்று காலை 7.25 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விழா நடைபெறும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். அவருக்குப் பின்னர் சிறிது நேரத்தில்ஆளுநர் ஆர். என்.ரவி வந்தார். ஆளுநர் வந்ததும், முதலில் காவல்துறை அணிவகுப்புமரியாதை கொடுக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்டார் ஆளுநர். அதன் பின்னர் அமைச்சர்கள், அதிகாரிகளை ஆளுநருக்கு முதல்வர் அறிமுகப்படுத்தி வைத்தார்.
இதையடுத்து தேசியக் கொடி ஏற்றும் வைபவம் நடந்தது. ஆளுநர் ஆர். என். ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தேசியக் கொடி பட்டொளி வீசி பறந்தபோது வானிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.
தேசிய கொடியை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றி வைத்தார். அப்போது அந்த பகுதியின் மேல் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர் தூவியது. இதைத் தொடர்ந்து அணிவகுப்புகள் தொடங்கின. முப்படையினர் அணிவகுப்புக்குப் பின்னர் பல்வேறு அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும், கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றது.
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}