சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி இதுவரை நிலுவையில் வைத்திருந்த 10 மசோதாக்களை விளக்கம் கேட்டு தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார்.
திருப்பி அனுப்பியுள்ள பத்து மசோதாக்களையும் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி ஆளுநருக்கே அனுப்ப தமிழ்நாடசு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சனிக்கிழமையன்று சிறப்பு சட்டசபைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே தொடர்ந்து முரண்பாடு நிலவி வருகிறது. இது நாளுக்கு நாள் முற்றி வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. தமிழ்நாடு அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிப்பதில்லை என்ற புகார் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

குறிப்பாக சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் மிகப் பெரிய அலட்சியம் காட்டுகிறார், தாமதம் செய்கிறார், ஒப்புதல் தர மறுக்கிறார், நிராகரிக்கிறார், திருப்பி அனுப்புகிறார் என்ற புகாரை திமுக அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
இந்த நிலையில்தான் ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிலுவையில் வைத்திருப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அ ரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான முதன்மை பெஞ்ச், ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து கவலை தெரிவித்திருந்தது. ஆளுநர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிடையாது. சட்ட மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பது தவறானது. ஒன்று ஒப்புதல் தர வேண்டும். இல்லாவிட்டால் அரசுக்கு திருப்பி அனுப்பி வைத்து விட வேண்டும். தமிழ்நாடு அரசு கூறியுள்ள புகார்கள் அனைத்தும் தீவிரமானவை, கவலைக்குரியவை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த நிலையில் தற்போது தன் வசம் நிலுவையில் இருந்த 10 மசோதாக்களை தமிழ்நாடு அரசிடமே விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பியுள்ளார். இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற தமிழ்நாடு அரசு தீர்மானித்துள்ளது. இதற்காக சனிக்கிழமையே சட்டசபை சிறப்புக் கூட்டம் கூட்டப்படும் என்றும் தெரிகிறது.
இப்படித்தான் நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதாவையும் தமிழ்நாடு அரசிடம் திருப்பி அனுப்பினார் ஆளுநர். அதே மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது தமிழ்நாடு அரசு. அதன் பிறகு அதற்கு அவர் ஒப்புதல் அளித்தார். மசோதாக்களை மாநில அரசு மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
10 மசோதாக்களை திருப்பி அனுப்பியுள்ளதால் மீண்டும் ஆளுநர் - திமுக அரசு இடையிலான மோதல் மீண்டும் வலுப் பெற்றுள்ளது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}