சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி இன்று மாலை டெல்லி செல்கிறார். அவரது பதவி நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ்நாடு ஆளுநராக இருந்து வருகிறார் ஆர்.என். ரவி. இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஆவார். பதவி ஓய்வுக்குப் பின்னர் முதலில் 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி நாகாலாந்து மாநில ஆளுநராகப் பொறுப்பேற்றார். 2021 செப்டம்பர் 9ம் தேதி வரை அந்தப் பொறுப்பில் இருந்தார். அதன் பின்னர் தமிழ்நாட்டுக்கு அவர் மாற்றப்பட்டார். அவரது பதவிக்காலம் ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது.
தமிழ்நாட்டுக்கு ஆளுநராக அவர் வந்தது முதல் அவருக்கும், திமுக தலைமையிலான அரசுக்கும் இடையே ஏகப்பட்ட முட்டல் மோதல்கள் இருந்து வந்தன. இதன் உச்சமாக தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் பேச்சின் மீது தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பே வெளிநடப்பு செய்த சம்பவத்தையும் நாடு கண்டது.
இந்த நிலையில் மத்தியில் கூட்டணி ஆட்சியை பாஜக அமைத்துள்ளது. மாநிலத்திலும் ஆளுநர் ரவியின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது. ஆனால் புதிய ஆளுநர் நியமிக்கப்படவில்லை. ரவியின் பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் இதுதொடர்பாக இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் மத்திய அரசிடமிருந்து வரவில்லை.
இந்த நிலையில் இன்று மாலை டெல்லி செல்லவுள்ளார் ஆளுநர் ரவி. டெல்லியில் உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளார். பிரதமர் மோடியையும் அவர் சந்திப்பாரா என்று தெரியவில்லை. மறுபக்கம் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்றே டெல்லி போயுள்ளார். இந்த இரண்டுக்கும் தொடர்பு உண்டா அல்லது இருவரும் தனித் தனி காரணங்களுக்காக டெல்லி சென்றுள்ளனரா என்று தெரியவில்லை.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}