சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி டெல்லிக்கு புறப்பட்டுப் போயுள்ளார். இன்று காலை விமானத்தில் அவர் டெல்லி கிளம்பிச் சென்றார்.
தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் 12ம் தேதி தொடங்கியது. அப்போது ஆளுநர் ஆர். என். ரவி கலந்து கொண்டு தனது உரையை முழுமையாக படிக்கவில்லை. தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்பது குறித்து அதிருப்தி தெரிவித்த அவர் படிக்காமல் அமர்ந்து விட்டார். பின்னர் சபாநாயகர் அப்பாவு வாசித்து முடித்தார்.
தனது பேச்சின் முடிவில் ஆளுநர் குறித்து சபாநாயகர் கூறிய கருத்துக்களாலும், தனக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டதாலும் அதிருப்தி அடைந்த ஆளுநர் ஆர். என். ரவி, தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே சட்டசபையிலிருந்து வெளிநடப்புச் செய்து வெளியேறினார்.
இந்த நிலையில் இன்று சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்தப் பின்னணியில் இன்று காலை ஆளுநர் ஆர். என். ரவி அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவர் நான்கு நாட்கள் டெல்லியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின்போது முக்கியமாக அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசவுள்ளார்.
இந்த மாதத் தொடக்கத்தில்தான் டெல்லிக்குச் சென்று திரும்பினார் ஆளுநர். ஒரே மாதத்தில் அவர் 2வது முறையாக டெல்லிக்குச் செல்வது பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}