சென்னை: சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்டப் படமான கங்குவா படத்துக்கு 14ம் தேதி மட்டும் 9 மணிக்கு சிறப்புக் காட்சியை திரையிட்டுக் கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளது. அதேசமயம், அதிகாலைக் காட்சிக்கு அனுமதி கிடைக்கவில்லை.
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்டப் படம் கங்குவா. தமிழ் தவிர பல்வேறு மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. சிவா இப்படத்தை இயக்கியுள்ளார். நாடு முழுவதும் 11,000 திரைகளில் இப்படம் திரையிடப்படவுள்ளது.

இப்படம் நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினத்தன்று வெளியாகிறது. இப்படத்திற்கு சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு படத் தயாரிப்பு நிறுவனம் தமிழ்நாடு அரசிடம் கோரியிருந்தது. குறிப்பாக அதிகாலை காட்சியை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. அதிகாலை காட்சி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் படக் குழு இருந்தது.
ஆனால் சமீப காலமாக அதிகாலைக் காட்சிகளை தமிழ்நாடு அரசு அனுமதிப்பதில்லை. ரஜினிகாந்த் படத்துக்கே கூட அதிகாலைக் காட்சி அனுமதிக்கப்படவில்லை. விஜய் படத்திற்கும் கூட அதிகாலைக் காட்சிக்கு அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் கங்குவா படக் குழுவினர் கண்டிப்பாக அதிகாலை காட்சி கிடைக்கும் என்று நம்பிக்கையாக கூறி வந்தனர். ஆனால் அந்த அனுமதி கிடைக்கவில்லை. வழக்கமாக தரப்படும் திரையீட்டின் முதல் நாளில் கூடுதலாக 9 மணிக்கு ஒரு காட்சியை அனுமதிக்கும் பெர்மிஷன் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை படக் காட்சிகளை திரையிட்டுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு
இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்
புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!
ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்
புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!
த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!
{{comments.comment}}