வேற லெவலுக்கு மாறும் மாடி ரயில்.. கையகப்படுத்தும் தமிழ்நாடு அரசு.. இனி லாபம்தான்!

May 07, 2023,04:34 PM IST
சென்னை:  தெற்கு ரயில்வேயின் கீழ் வரும் மாஸ் ரேபிட் டிரான்சிஸ் சிஸ்டம் எனப்படும் எம்ஆர்டிஎஸ் ரயில் சேவையை தமிழ்நாடு அரசு கையகப்படுத்தப் போகிறது. இதனால் இனி இந்த ரயில் சேவையில் பெரும் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாடி ரயில் என்று சென்னை மக்களால் செல்லமாக அழைக்கப்படும் இந்த எம்ஆர்டிஎஸ் சேவை சென்னையின் கிழக்குப் பகுதி மக்களுக்கு சேவையாற்றி வருகிறது. வேளச்சேரி முதல் பீச் வரையிலான இந்த சேவை சென்னை மக்களுக்கு நீணஅ்ட காலமாக சேவையாற்றி வருகிறது. ஆனால் இதுவரை இது லாபம் சம்பாதிக்கவே இல்லை. ஆண்டுக்கு ஆண்டு நஷ்டம்தான் அதிகரித்து வருகிறது.

இந்த ரயிலில் குறைந்தபட்ச கட்டணமே ரூ. 5தான். மேலும் பெரியஅளவில் கூட்டமும் வருவதில்லை. இதனால் இந்த ரயில் சேவை தொடர்ந்து நஷ்டத்தில்தான் இயங்கி வருகிறது.  கடந்த ஆண்டு மட்டும் ரூ. 84.10 கோடி நஷ்டத்தை இது சந்தித்தது. இதன் காரணமாக ரயில் நிலையங்களைப் பராமரிப்பது , ரயில் பெட்டிகளைப் பராமரிப்பது போன்றவை சிரமத்தில் உள்ளன.




இதையடுத்து இந்த ரயில்சேவையை தமிழ்நாடு அரசு வாங்கி தானே நடத்தத் திட்டமிட்டுள்ளது. மேலும் குறைந்தபட்ச கட்டணத்தையும் ரூ. 10 ஆக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் பெட்டிகளையும் மாற்றவும், ரயில் நிலையங்களை நவீனமாக்கவும்  திட்டங்கள் உள்ளன. இதன் மூலம் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தையும், கூடவே வருமானத்தையும் ஏற்படுத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே தற்போது ஆண்டுக்கு ரூ. 100 கோடியை பராமரிப்பு, ஊழியர்கள் சம்பளம் உள்ளிட்டவற்றுக்காக செலவிட்டு வருகிறது. ஆனால் டிக்கெட் கட்டணம் சரிவர இல்லை. கடந்த ஆண்டு டிக்கெட் கட்டணம் வெறும் ரூ. 17.25 கோடிதான். 

இதனால் இந்த ரயில்சேவையை முழுமையாக மாநில அரசே எடுத்து நடத்தத் திட்டமிட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவை எப்படி சிறப்பாக நடைபெறுகிறதோ அதேபோல இந்த எம்ஆர்டிஎஸ் சேவையையும் மாற்றும் திட்டத்தில்  தமிழ்நாடு அரசு உள்ளது. ரூ. 500 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட தொகைக்கு இந்த சேவையை ரயில்வேயிடமிருந்து தமிழ்நாடு அரசு பெறும் என்று தெரிகிறது.



இதை இரு கட்டமாக செயல்படுத்த முன்னதாக திட்டமிடப்பட்டது. அதாவது ரயில் நிலையங்களை வர்த்தக ரீதியாக லாபகரமாக  மாற்றும் பணியை முதலில் சிஎம்டிஏ செய்யும். ரயில்களை இயக்குவது, பராமரிப்பதை ரயில்வே பார்த்துக் கொள்ளும். அடுத்த கட்டமாக மொத்தமாக ரயில்கள் உள்ளிட்டவற்றை சிஎம்டிஏ கையகப்படுத்தும்.  ஆனால் இது நடைமுறைக்கு வரவில்லை.

இந்த நிலையில் தற்போது இந்தத் திட்டம் மீண்டும் உயிர் பெற்றுள்ளது. விரைவில் இதுதொடர்பான முடிவுகள்  எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்