சென்னை: தமிழ்நாட்டில் உள்ள இணையம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைத்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
ஊபர், ஓலா, சொமாட்டோ, ஸ்விக்கி போன்ற இணையம் சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு மிகுந்த வரவேற்பை பெற்றது.
இது போன்ற பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு, விபத்து காப்புறுதி, சுகாதார காப்புறுதி போன்றவை இல்லை. இந்த நிலையில் அமைப்பு சாராக் தொழிலாளர்களின் நலனுக்காக தனி நல வாரியம் அமைக்கப்படும் என சுதந்திர தினத்தன்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து ஊபர், ஓலா,டொமேட்டோ, ஸ்விகி தொழிலாளர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்தநிலையில், தமிழக இணையம் சார்ந்த தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைத்து இன்று அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இணைய செயலிகள் வாயிலாக இயங்கும் வாடகை, வாகன சேவைகள், உணவு, மளிகை உள்ளிட்ட அனைத்து டெலிவரி சேவைகளிலும் பணிபுரியும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு என தனி நல வாரியத்தை அமைத்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள ஆணையில் "தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் (GIG) தொழிலாளர்கள் நல வாரியம்" எனும் புதிய நலவாரியம் தோற்றுவித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கிக் தொழிலாளர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு பெற்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}