"ஹாய் அம்மா.. எப்படி இருக்கீங்க".. கைதிகள் இனி குடும்பத்தினருடன்.. வீடியோ காலில் பேசி மகிழலாம்!

Dec 13, 2023,06:12 PM IST
சென்னை: தமிழ்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், இனி தங்களது குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசி மகிழும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதுதொடர்பான அனுமதியை சிறைத் துறைக்கு, தமிழக அரசு வழங்கியுள்ளது. சிறைச்சாலைகளில் வீடியோ கால் வசதியுடன் கூடிய தொலைபேசி பூத்துகளை அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.  பொதுத்துறை நிறுவனங்களின் உதவியுடன் இதை மேற்கொள்ளுமாறும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு உத்தரவுகளை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது. 

கொரோனா காலத்தின்போது அனைத்து சிறைகளிலும் கைதிகளை, கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்துவதற்குப் பதில் வீடியோ கால் மூலம் ஆஜர்படுத்தும் முறை அமல்படுத்தப்பட்டது. அந்த வசதியை தங்களுக்கும் அளித்தால் குடும்பத்தினரைப் பார்த்து மகிழ முடியும் என்று கைதிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. அந்தக் கோரிக்கையை தற்போது பரிசீலித்து அனுமதி அளித்துள்ளது. 



உண்மையில் கொரோனா காலத்தின்போது கைதிகள், சிறைத்துறையின் ஆண்ட்ராய்ட் போன்கள் மூலமாக தங்களது குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசி வந்தனர். கொரோனோ காலம் முடிந்ததும் அது நிறுத்தப்பட்டு விட்டது என்பது நினைவிருக்கலாம்.

இதுதவிர மேலும் சில சலுகைகளையும் அரசு அனுமதித்துள்ளது. தற்போது கைதிகள் மாதம் 8 முறை, தங்களது குடும்பத்தினருடன் போனில் பேச முடியும். அதாவது 3 நாட்களுக்கு ஒருமுறை பேச வாய்ப்பளிக்கப்படும். அதை தற்போது 10 கால்களாக உயர்த்தியுள்ளது அரசு. இனிமேல் கைதிகள் மாதம் 10 முறை தங்களது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசலாம்.

அதேபோல கைதிகள் பேசும் நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு மாதத்திற்கு 56 நிமிடங்கள் வரை அதிகபட்சம் பேசலாம். அதை தற்போது 120 நிமிடங்களாக அதிகரித்துள்ளது அரசு. அதாவது ஒரு கால் அதிகபட்சம் 12 நிமிடம் வரை பேசலாம். 

அனைத்து மத்திய சிறைகள், புதுக்கோட்டையில் உள்ள பெண்கள் சிறப்பு சிறை மற்றும் பார்ஸ்டல் ஸ்கூலில் இந்த சலுகை அமலுக்கு வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

அதிரடியாக ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை... சவரன் 76,000த்தை கடந்தது!

news

திராவிட அரசு பொய்யான, மோசடியான அறிவிப்புகளை வெளியிட்டு தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது: அன்புமணி!

news

கூட்டணி, விஜய் குறித்த கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள்: பிரேமலதா விஜயகாந்த் காட்டம்!

news

Pillaiyar: விநாயகருக்கு பிள்ளையார் என்ற பெயர் வந்தது எப்படி?

news

விஷால்- சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம்...பிறந்தநாளில் எளிமையாக நடந்தது

news

சிறுநீரக கற்களைத் தடுக்கலாம்.. கவலைப்படாம.. இதைக் கொஞ்சம் பாலோ பண்ணிப் பாருங்க

news

இங்கிலாந்து சென்று தந்தை பெரியாரின் படத்தை திறந்து வைக்க போகிறேன்: முதல்வர் முக ஸ்டாலின் பெருமிதம்!

news

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க.. திமுக கையில் இருக்கும் 4 மேட்டர்!

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.520 உயர்வு!

அதிகம் பார்க்கும் செய்திகள்