"தமிழ்நாய்டு".. மத்திய அரசு இணையதளத்தில் தவறான பெயர்களால் சர்ச்சை!

Jan 28, 2023,09:22 AM IST
சென்னை: மத்தியஅரசின் இணையதளத்தில் தமிழ்நாட்டின் பெயரை தமிழ் நாய்டு என்று எழுதியதால் சர்ச்சை வெடித்தது. பலரும் இதை சுட்டிக் காட்டிய பின்னர் அந்தத் தவறு சரி செய்யப்பட்டது.



mygov.in என்ற மத்திய அரசின் இணையதளத்தில் குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகளில் எது உங்களை வெகுவாக கவர்ந்தது என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதில் ஆப்ஷனாக அலங்கார ஊர்திகள் பங்கேற்ற மாநிலங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அதில் ஒன்றை நாம் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கலாம்.

அதில், அனைத்து மாநிலங்களின் பெயர்களும் சரியாக எழுதப்பட்டுள்ளன. ஆனால் கேரளாவின் பெயரை கேரெளா என்றும் தமிழ்நாட்டின் பெயரை தமிழ்நாய்டு என்றும் தவறாக எழுதியிருந்தனர்.  இது சர்ச்சையை கிளப்பியது.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியது. மத்தியஅரசின் மிக முக்கியமான இணையதளத்தில் இப்படி ஒரு தவறு நடக்கலாமா என்று பலரும் அதிருப்தி வெளியிட்டிருந்தனர். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸம் இதற்குக் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அந்த தவறு சரி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்