தஞ்சாவூர்: தஞ்சாவூரில் விழா மேடையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தன் உதவியாளரை எருமை மாடா நீ என்று ஒருமையில் திட்டிய விவகாரம் தற்போது சர்ச்சையாகியுள்ளது.
தஞ்சாவூர் மேலவஸ்தாசாவடியில் தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், டி.ஆர்.பி.ராஜா, எம்பி, எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதன்பின்னர் பேச துவங்கிய அவர், அனைவருக்கும் வணக்கம் கூறி உரையை தொடங்கனார். அப்போது திரும்பி உதவியாளரை தேடிய அவர், மைக்கை ஆனில் வைத்துக்கொண்டே எங்கயா அவன், பரசுராமன் எங்கேயா. (அப்போது உதவியாளர் வேகமாக வந்தார்) எருமை மாடா டா நீ. பேப்பர் எங்கே என்றார். உடனே உதவியாளர் பேப்பரை கொடுக்க, அதனை வாங்கிய அவர், உடனே கீழே வீசி விட்டார்.
இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொது மேடையில் பலர் முன்னிலையில் அமைச்சர் தனது உதவியாளரிடம் நடந்து கொண்ட விதம் பலரையும் முகம் சுளிக்க வைத்ததுடன். விழாவில் சலசலப்பையும் ஏற்படுத்தியது. அத்துடன் சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் பரவி அமைச்சருக்கு எதிராக பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கரூர் கூட்ட நெரிசல்.. விஜய்யிடம் நாளை சம்பவம் செய்யப் போகும் சிபிஐ.. டெல்லியில் விசாரணை
தேசத்தின் மானம் காத்த.. தேசியக் கொடிகாத்த குமரனை தெரிந்து கொள்வோமா?
கூடாரவல்லியில் கைகூடும் மாங்கல்யம்!
குமரேசனாய் பிறந்து.. இமயம் முதல் குமரி வரை போற்றிய .. கொடி காத்த குமரன்!
வில்லிபுத்தூர் ஆண்டாளும் கூடார வல்லியின் சிறப்புகளும்!
தென்றல் காற்று தாலாட்ட.. தென்னங்கீற்று தலையாட்ட... குயிலின் ஓசை இசை பாட.. மழை!
இதற்கு மேல்....!
"200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்"...முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
தேமுதிக.,வுடன் கூட்டணி பேச்சு...ஆட்சியில் பங்கு விவகாரங்கள்...நயினார் 'நச்' பதில்
{{comments.comment}}