சென்னை: தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி. அக்கட்சித் தலைவர் முஸ்தபா, தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தை நேரில் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார்.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி அக்கட்சியின் உட்கட்டமைப்பு பணிகளில் தீவிரமாக பணியாற்று வருகிறார். கட்சிப் பணிகளை பார்த்து பார்த்து செய்து வருகிறார். 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் முழுமையாக களம் காணுவதற்காக இப்போதிலிருந்தே ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதில் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தில் அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட 120 மாவட்டங்களுக்கு மூன்று கட்டங்களாக புதிய நிர்வாகிகள் நியமனத்தை செய்து முடித்தார்.

விசிகவில் துணை பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் ஆர்ஜுனா, அக்கட்சியில் இருந்து விலகி விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். இவரைத் தொடர்ந்து, அதிமுகவில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளராக இருந்த சிடிஆர் நிர்மல் குமாரும் தவெகவில் இணைந்தார். அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியுடன் இணைந்து, அவரது அரசியல் வியூகங்களைப் பின்பற்றி தேர்தல் மேலாண்மை பணிகளை ஆதவ் அர்ஜுனா மேற்கொள்வார் என விஜய் அறிவித்தார்.
இதற்கிடையே தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி ஓராண்டு நிறைவடைந்து இரண்டாம் ஆண்டு துவங்கியுள்ளது. கட்சி அலுவலகத்தில் தவெகவின் கொள்கை தலைவர்களின் சிலையை விஜய் திறந்து வைத்து, இந்த மாதம் முழுவதும் தவெக சார்பில் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. ஆண்டு விழா மற்றும் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்த கட்சித் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். அதன்படி இந்த இரண்டு விழாக்களும் வரும் மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் ஒரு கட்சி கூட்டணியில் இணைய உள்ளதாகவும் இக்கட்சி குறித்து இம்மாதத்தில் வெளியிட இருப்பதாகவும் அவ்வப்போது தகவல்கள் கசிந்து வந்தன. இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா அக்கட்சியில் இணையும் என அறிவித்துள்ளார். தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி தலைவர் முஸ்தபா, தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனாவை சந்தித்து கூட்டணி பேச்சு வார்ததையை நடத்தி வருகிறார்.
தவெகாவுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்த முதல் கட்சி இது தான். கூட்டணி உருவாக்கத்தில் தமிழக முஸ்லிம் கட்சி முதல் கட்சியாக களம் இறங்கியுள்ளது. விஜய் கூட்டணியில் இணையும் முதல் கட்சி என்பதால், இனி 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி தேர்தல் வியூகம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
முன்னதாக தவெகவின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி சாலையில் நடைபெற்றபோது கட்சியின் கொள்கைகளை அறிவித்த விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும். தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம் என அறிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}