சென்னை: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த பாரத் ஸ்கவுட் அண்ட் கைட் நிகழ்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி கலந்து கொண்டு ஜொலித்துள்ளார்.
பாரத சாரண சாரணிய இயக்கத்தின் வைர விழா ஆண்டின் நிறைவு விழா உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நவம்பர் 23 முதல் 23ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த விழாவில் நாடு முழுவதுமிருந்து ஏராளமான சாரண சாரணிய மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் தமிழ்நாட்டிலிருந்து கலந்து கொண்டவர்களில் சின்ன தாராபுரம் ஆர்.என். மெட்ரிக் பள்ளியைச் சேரந்த 8 சாரணியர்கள் மற்றும் ஆசிரியை ஆகியோரும் அடங்குவர். இதில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவி ச.ச.கவிஸ்ரீயும் கலந்து கொண்டு பல்வேறு சிறப்பு நிகழ்வுகளில் கலந்து கொண்டு சான்றிதழ்களைப் பெற்று அசத்தினார்.
ச.ச.கவிஸ்ரீ உள்ளிட்ட 8 சாரணியர்களுக்கும், ஆசிரியைக்கும் பள்ளியின் செயலாளர்,ஆர். என். பாபு, பொருளாளர்,பி.தியாகராஜன், முதல்வர். டாக்டர்.ஆர்.ராமசாமி மற்றும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
மாணவி கவிஸ்ரீயின் பாட்டி க.பிரேமா, திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் நடத்தும் பல்வேறு இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}