சென்னை: பெரிய நடிகர்களின் படம் 8 வாரம் கழித்தும். அதற்கு அடுத்த வரிசையில் உள்ள நடிகர்களின் படம் 6 வாரங்கள் கழித்தும் ஓடிடியில் திரையிட வேண்டும் என்று தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம் போட்டுள்ளது.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை தேனாம்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர். பன்னீர் செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் கூறியதாவது:
தயாரிப்பாளர்கள் கவனத்திற்கு நாம் ஏற்கனவே பேசி ஒப்புக்கொண்டபடி திரைப்படங்களை OTT யில் கீழ்கண்ட முறையில் திரையிட அனுமதிக்க வேண்டும். பெரிய நடிகர்களின் படம் 8 வாரம் கழித்தும். அதற்கு அடுத்த வரிசையில் உள்ள நடிகர்களின் படம் 6 வாரங்கள் கழித்தும் OTT யில் திரை இடும்படி கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ் திரைப்படங்கள் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தான் திரையிடப்பட வேண்டும். சில மாநிலங்களில் முன்னதாக திரையிடப்படுவதால் தமிழகத்தில் வசூலில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது
தமிழ்நாடு அரசுக்கு சில கோரிக்கைகள் வைத்துள்ளோம்.

1. திரையரங்குகளில் பராமரிப்பு கட்டணத்தை அனுமதி கட்டணத்தில் இருந்து 10% வசூலிக்க அனுமதி தர வேண்டுகிறோம். மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளுக்கு ரூ.250 வரையும், A/C திரையரங்குகளுக்கு ரூ.200 வரையும், NON A/C திரையரங்குகளுக்கு ரூ. 150 வரையும் என்று கட்டணம் நிர்ணயித்து கொடுக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்
2. நம் பக்கத்து மாநிலங்களில் உள்ளபடி 24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதி உள்ளது. அதுபோல் தமிழ்நாட்டிலும் இது போன்ற அனுமதிகள் வழங்கப்பட வேண்டும். திரையரங்குகளில் இத்தனை காட்சி தான் திரையிட வேண்டும் என்று கட்டுப்பாடு இல்லாமல் திரையிட அனுமதி தர வேண்டும்.
3. Operator License க்கு புதிய வழிமுறையை வகுத்து தந்தீர்கள். அது தெளிவாக இல்லாததால் அதை வைத்து எந்த பலனும் நாங்கள் அடையவில்லை. ஆகவே அதை மாற்றி நாங்கள் கேட்டது போல் Operator License தேவையில்லை அல்லது எளிய முறையில் Operator License தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.
4. மால்களில் உள்ள திரையரங்குகளில் Commercial Activity க்கு அனுமதி வழங்கியது போல் மற்ற திரையரங்குகளுக்கும் Commercial Activity க்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
5. மின் கட்டணத்தை, MSME விதிகளை பின்பற்றி திரையரங்குகள் MSME இன் கீழ் வருவதால் MSME விதிபடி எங்களுக்கு கட்டணங்கள் வசூலிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
அலை ஓடியே போனாலும் கரை கொண்ட நுரையழகு!
Letter to my favourite toy as a kid
Day of celebrating the selfless service
சிறுகதை: இதுதான் ட்ரெண்ட்!
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
{{comments.comment}}