சென்னை: தமிழ்நாட்டில் திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை வெயில் வெளுத்தெடுத்து வரும் நிலையில் வருகிற 25ம் தேதி முதல் 5 நாட்களுக்கு பரவலாக லேசானது முதல் மிதமான மழைக்கு வாயப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் மகிழ்ச்சிச் செய்தியைச் சொல்லியுள்ளது.
தமிழ்நாட்டில் படிப்படியாக வெயில் அதிகரித்து வருகிறது. எல்லாப் பகுதிகளிலும் நல்ல வெயில் அடித்துக் கொண்டுள்ளது. மேலும் இயல்பை விட கூடுதலாக 2 முதல் 3 டிகிரி அளவுக்கு வெயில் அதிகரித்தும் காணப்படுகிறது. மாசி மாதத்திலேயே வெயில் கொளுத்த ஆரம்பித்திருப்பதால் பங்குனியை நினைத்து இப்போதே மக்கள் பதட்டமாக ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஒரு செய்தியைத் தெரிவித்துள்ளது. அதன்படி 25ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது பொதுவாக வறண்ட வானிலையே நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் திருப்பத்தூரில் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் வெளுத்துள்ளது.
அடுத்த 2 நாட்களில் வெப்ப நிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது. அதேசமயம் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை வெப்ப நிலையில் சற்று தளர்வு காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
மரமா பாறையா!
தூத்துக்குடி முத்து போல!
How Can We Motivate Children to Discover Their Skills?
World Food Day: ஒவ்வொரு பருக்கை உணவும் முக்கியம்.. வீணடிக்காதீர்கள்!
கருவறைப் பூக்கள்
எதிர்கால தலைமுறைக்கு பசுமை நிறைந்த உலகை விட்டு செல்வோம்!
World Food day: மனிதா, பிறருக்கு உணவளித்துப் பார்!
{{comments.comment}}