தமிழ்நாடே குளுகுளுன்னு இருக்கு.. மே 17 வரை கனமழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

May 13, 2024,05:46 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மே 17 வரை ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கடந்த இரண்டு மாதங்களாக வெயில் கொளுத்தி எடுத்தது. இதனால் மக்கள் பலரும் புலம்பி தவித்து வந்தனர். இந்த சூழ்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து சற்று குளுமை நிலவி வருகிறது. மேலும் பகல் நேரங்களில் வெயில் இல்லாமல் வானம் மேகமூட்டத்துடன் சிலு சிலு என்ற காற்றும் அடிப்பதால், நல்ல காலநிலை நிலவுகிறது. இதனால் இரவு நேரங்களில் புழுக்கம் இல்லாமல் நல்ல தூக்கம் வருகிறது. தற்போது கோடை மழை பரவலாக பெய்து வருவதால் மக்கள் குஷியில் உள்ளனர்.




இந்த நிலையில் குமரி கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மே 17 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


நாளை:


தமிழ்நாட்டில் திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி, ஆகிய ஏழு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


நாளை மறுநாள்:


திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி, ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


மே 16:


நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திண்டுக்கல், நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டனம், புதுக்கோட்டை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


சென்னையைப் பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த ஐந்து தினங்களுக்கு தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை படிப்படியாக குறையும் என அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்