சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் உள் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று அக்டோபர் 1ஆம் தேதி தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டம் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
01.10.2024
தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.கோயம்புத்தூர் மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
02.10.2024
தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

03.10.2024
தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை கடலூர் தேனி திண்டுக்கல் கள்ளக்குறிச்சி கிருஷ்ணகிரி தர்மபுரி திருப்பத்தூர் வேலூர் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
04.10.2024
தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், புதுச்சேரி, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
05.10.2024
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அக்டோபர் 6 மற்றும் 7ம் தேதிகளில் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
அக்டோபர் 1,2,3 ஆகிய நாட்களில் மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடை 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடல் பகுதிகளில் இன்று கேரளா கடலோரப்பகுதிகள், லட்சதீவு-மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நவம்பர் 22ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...எங்கெல்லாம் மழை பெய்யும் தெரியுமா?... இதோ முழு விபரம்!
மதுரை - கோவைக்கு மெட்ரோ ரயில் சேவை வரும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்
சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்விற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!
துருப்பிடித்துப் போய்விட்ட திமுக ஆட்சிக்கு நேற்று நடந்த குற்றங்களே சாட்சி: நயினார் நாகேந்திரன்
கொரியன்களுக்கு ஏன் தொப்பை இல்லை தெரியுமா.. கவிஞர் சொல்கிறார் கேளுங்கள்!
சபரிமலையில் குவியும் ஐயப்ப பக்தர்கள்.. தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் வருகை!
மதுரை, கோவை மெட்ரோ திட்டம் வராதா.. கவலையில் மக்கள்.. கேள்விக் கனை தொடுக்கும் எம்.பிக்கள்
மீண்டும் பீகார் முதல்வராகிறார் நிதீஷ் குமார்.. இன்று தேஜகூ சட்டமன்ற தலைவராக தேர்வாகிறார்
TET தேர்வு.. சோசியல் சயின்ஸுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை.. முரண்களைக் களையுங்களேன்!
{{comments.comment}}