சென்னை: தமிழ்நாட்டில் இன்னும் ஐந்து நாட்கள் அதிக மழை தொடரும் என்பதால் கூடவே ரெயின் கோட்டை எடுத்துச் செல்லுங்கள் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
மேலும் சென்னையில் வெயில் இன்று சுட்டெரித்தாலும் விரைவில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நேற்று ஒரு சில மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு முழுவதும் நேற்று பரவலாக கன முதல் மிக கனமழை கொட்டி தீர்த்ததுள்ளது. பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் கனமழை பெய்துள்ளது. இதனால் பல பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதையும் காண முடிந்தது.
அருவிகளில் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளதால் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இன்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தமிழ்நாட்டு மக்களுக்கு குட் நியூஸ் கொடுத்துள்ளார்.
அதில், குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு வளிமண்டல சுழற்சி தமிழ்நாட்டு கடல் பகுதிகளிலும் நெருங்கி வருகிறது. அதனால் இதுவரை பார்த்த மழை எல்லாம் சும்மா ட்ரெய்லர் தான். இனி தான் தமிழ்நாட்டில் மழையின் ஆட்டம் தீவிரமாகப் போகிறது. இதனால் தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மழை அதிகரிக்கும். அதனால் வெளியே செல்லும்போது கூடவே ரெயின் கோட்டையும் எடுத்துச் செல்லுங்கள்.
சென்னையில் தற்போது நிலவும் வெயில் காலநிலை மாறி, நல்ல சாதகமான சூழ்நிலை அமையும்.அதேபோல் சென்னையில் இன்று வெயில் சுட்டரித்தாலும் விரைவில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் சொன்னது போலவே சென்னையில் தற்போது வானம் மூடிக் கொண்டு வருகிறது. எல்லாம் நல்லபடியாக நடந்தால் செமத்தியான மழையை சென்னை மக்கள் அனுபவிக்கலாம்.
.துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாட்டில்.. இன்று மழையும், வெயிலும் இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்!
{{comments.comment}}