என்ன செய்தாள் உனக்கு??

May 16, 2026,12:46 PM IST

- டிலாணி ஸ்ரீதரன்


துள்ளித் திரிந்தக் காலத்தில் ஆசையோடு

காதலைப் பருகினாய் அள்ளி! 


நித்தமும் கொஞ்சினாய் 

அழகழகானப் பொய்களையும் சொல்லி! 


தினமும் கவிதைகளையும் பலகதைகளையும் 

கொண்டு வருவாய் துள்ளி! 


கற்பனையில் மிதந்து கனவா நனவாயென 

உன்னையேப் பார்ப்பாய் கிள்ளி!


பொய்கள் என்றேத் தெரிந்தாலும் 

மகிழ்ந்தாளே இந்தக் கள்ளி!


மணந்து கொண்டு பெற்றோரையும் விட்டு வந்தோம் தள்ளி!




குடும்பத்தையும் அனுசரித்து பக்குவமாய்

போட்டுக் கொண்டோம் 

எங்களுக்கு நாங்களே வேலி!


உயிரில் கலந்து 

உங்களுக்கும் ஆகினோம் விருந்து! 


சின்னச் சண்டைகளும் சீக்கிரம் சமாதானங்களும் தினமும் நடந்து! 


தித்தித்தது தான் வாழ்க்கையும் முத்தாய்ப்பாய் சிறந்து


வாழ்வின் அர்த்தம் புரிந்துக் கொண்டேன் 

பத்து மாதம் கருவைச் சுமந்து!


மழலைகளின் சிரிப்பொலியில் மனமும் பொங்குமே மகிழ்ந்து!


வாழ்க்கையின் பாதைகளும் போனது வளைந்து நெளிந்து! 


சில மாற்றங்களும் உன்னிடம் வரக் கண்டேன் வியந்து! 


கொஞ்சவும் மிஞ்சவும் கூட நேரமில்லைப் பார்த்து! 


சில சமயங்களில் பேசுகிறாய் எள்ளி நகைத்து! 


முத்தமிட்டதும் முழு நிலவுக்கு ஒப்பிட்டதும் போகுமா மறந்து! 


முழுதாக உன்னில் தொலையும் வரை ஒதுக்கவில்லை நீயும் வெறுத்து!


வாழ்க்கையே நீயென்றேன் என்னையும் எதிர்பார்ப்பின்றி ஒப்படைத்து!


மகிழ்ந்தேன் 

அந்நாளில் எழுதிய கவிதைகளையும் வர்ணனைகளையும்

நினைத்து! 


இன்று உன் கைகளை கட்டி போட்டது யார் 

விடை தெரியாமல் நிற்கின்றேன் யோசித்து!


எனக்கு நானே என்னையும் கொஞ்சம் நிந்தித்து!


காதலிக்கும் போது நாயைக் கண்டாலும் கவிதை சொல்வாய் வர்ணித்து!


கட்டிய பின் உன்னைக் கண்டால் வீடே நடுங்குகின்றது என்கிறாய் புன்னகைத்து!


கவிதை கூட வர மறுக்கின்றது என்று சொன்னதில் போனேன் நானும் மௌனித்து! 


மனக்குமுறலாய் எனக்கும் வெடித்தது நெருஞ்சி முள்ளாய்த் தைத்து!


பாரதி கண்ட புதுமைப் பெண்களும் இதைக் கேட்டால் போவார்கள் மரணித்து! 


கடவுளிடம் பல கேள்விகளும் கேட்க விளைகிறேன் சந்தித்து! 


ஏன் வேடிக்கை பார்க்கிறாய் எங்களையும்

படைத்து!


பெண்கள் இல்லாத உலகமும் முழுமை அடையுமா? 

கூறுங்கள் மனம் திறந்து! 


எங்களை கவிதையால் வடிக்க தேவையில்லை 

கருத்தினில் புகுந்து! 


சிற்பமாய் செதுக்க தேவையில்லை 

நுட்பமாய் நுழைந்து! 


பாமாலை சூடத் தேவையில்லை

கீதமாய் இசைத்து!


வலிகளையும் வடுக்களையும்

வாரிக்கொண்டே வாழ்கிறாள் பாவை தன்னுள் புதைத்து!


அவளையும் ஒரு பெண்ணாக பாருங்கள் உணர்ந்து! 


பெண்ணினத்தை போற்றா விட்டால் பரவாயில்லை தூற்றுவதை நிறுத்து! 


நினைவலைகளாய் மீட்டுங்கள் என்ன செய்தாள் என்பதை நினைத்து!


கிறுக்கிக் கொண்டே போகலாம் உண்மைகளை உரைத்து! 


கிறுக்கினாலும் கிடைக்கப் போவதில்லை சில வலிகளுக்கு மருந்து!


கிறுக்கினேன் நானும் விழிகளில் நீர் சொரிந்து! 


விடைத் தெரியாத ரணங்களாக இதயத்தில் உறைந்து!


இனியும் தேவையற்ற கற்பனைகளையும் பலிகளையும் விடுத்து!


பெண்ணின் உன்னதம் உணருங்கள் கொஞ்சமாக சிந்தித்து!!!!!!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

"முதல்ல உங்க கட்சியைக் காப்பாற்றும் வேலையை பாருங்கள்!" - எடப்பாடி பழனிச்சாமிக்கு தவெக பதிலடி

news

"நான் எங்கும் ஓடி ஒளியவில்லை" - காவல்துறைக்கு செந்தில் பாலாஜி எழுதிய கடிதத்தால் பரபரப்பு!

news

"அதிமுகவின் எம்.எல்.ஏ-க்களை விஜய் களவாடுகிறார்!" – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

news

யாரையும் நாங்கள் அழைக்கவில்லை.. குதிரை பேர புகாருக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்!

news

வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி

news

தேர்தலில் தனித்துப் போட்டியிட கம்யூனிஸ்ட் கட்சிகள் தயார்: சிபிஐ திடீர் அறிவிப்பு!

news

அப்பா படம் ஜனநாயகன் வருது.. மகன் படம் சிக்மாவை ஆகஸ்ட்டுக்கு ஒத்திவைக்கும் லைகா?

news

தமிழகத்தில் நடப்பது அன்பு சாம்ராஜ்யம் - அமைச்சர் அருண்ராஜ் புகழாரம்

news

Santhi Sinnathambi Poem: இறைவா தருவாயா??

அதிகம் பார்க்கும் செய்திகள்