சென்னை: 3வது நாளாக சட்டசபை இன்று கூடிய நிலையில், இன்றும் அதிமுக உறுப்பினர்கள், அக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வெளிநடப்புச் செய்தனர்.
கள்ளக்குறிச்சியில் கடந்த 19ம் தேதி விஷ சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்தனர். இந்த சம்பவம் தற்பொழுது தமிழ்நாட்டையே கதிகலங்கச் செய்துள்ளது. பலர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அனுதாபங்களையும், இரங்கலையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவதாத்தை கையில் எடுத்துள்ள அதிமுகவினர், சட்டசபையில் அனலை கிளப்பி வருகின்றனர். நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதம் நடைபெற்றது. அப்போது அதிமுக எம்எல்ஏக்கள் அமளி துமளியில் ஈடுபட்டு பின்னர் வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டசபை இன்று 3வது நாளாக கூடியது. இன்றும் அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டையுடன் வந்து, கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விஷச்சாராய மரணங்கள் குறித்து விவாதிக்க கோரி கடும் அமளியில் ஈடுப்பட்டனர். அந்தக் கோரிக்கையை சபாநாயகர் அப்பாவு மறுத்ததால், அனைவரும் சட்டசபையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.
அதிமுகவினர் கோரிக்கையை ஏற்க மறுத்த சபாநாயகர் அப்பாவு, கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க முடியாது. கேள்வி நேரம் முடியட்டும், எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், எதிர்க்கட்சியினர் பேசுவதற்கு அனுமதி தருகிறேன் என்று தெரிவித்தார். அதனை கேட்காமல் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு செய்த பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி பேசுகையில்,கள்ளச்சாராயம் மரண விவகாரத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தவறான தகவல்களை தருவதாக குற்றம் சாட்டினார். கையாலாகாத ஆட்சியினாலும், நிர்வாகத் திறனற்ற ஆட்சியில் நடந்த இத்தனை உயிர்கள் பறிபோகியுள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.
கனிமொழி சொன்ன புதிய கட்சிகள்...யார் அவர்கள்? பரபரக்கும் அரசியல் களம்
தீயில் எரிந்தது விவசாயி மட்டும் அல்ல..சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான்:எடப்பாடி பழனிச்சாமி
2026 தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக 50 இடங்களில் போட்டியா?
அதிமுக - பாஜக வாக்கு வங்கியை பதம் பார்க்கிறாரா விஜய்.. சிவோட்டர் சர்வே சொல்வது என்ன?
காலத்தால் கரைந்த காங்கிரஸ்.. பாஜகவை வெல்ல முடியாமல் தவிப்பது ஏன்?
தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
வயலா எலுமிச்சை.. எங்கள் ஊரின் பசுமை பொக்கிஷம்!
'ஜனநாயகன்' படத்திற்கு அடுத்தடுத்த சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் புதிய மனு
தேசத் தந்தை தேசத்தின் விந்தை .. நற்குணம்விற்ற நாட்டுச் சந்தை.. அகிம்சை தலைவன்!
{{comments.comment}}