சென்னை: தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டிசம்பர் 1ம் தேதி சென்னை திரும்பவுள்ளார் என்று கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 2ம் தேதி காலை 10 மணிக்கு கட்சித் தலைமையகத்தில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு வழங்கப்பட உள்ளதாம்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியல் படிப்பிற்காக லண்டன் சென்றிருந்தார். லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 3 மாத காலம் சர்வதேச அரசியல் மேற்படிப்பு படிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி லண்டன் சென்றார். அண்ணாமலை லண்டன் சென்றதால், பாஜக நிர்வாகிகளை ஒருங்கிணைத்து வழிநடத்த எச். ராஜா தலைமையில் ஒருங்கிணைப்பு குழு ஒன்றை பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் நியமித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அந்த குழு கட்சியின் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்து வந்தது.

இந்நிலையில், லண்டன் சென்றிருந்த அண்ணாமலை அரசியல் படிப்பை முடித்துவிட்டு நவம்பர் 28ம் தேதி தமிழகம் திரும்புவார் என்று சொல்லப்பட்ட நிலையில், டிசம்பர் 1ம் தேதி வர இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அன்று நள்ளிரவு அவர் சென்னை வந்து சேருகிறாராம். அடுத்த நாள், டிசம்பர் 2ம் தேதி காலை 10 மணிக்கு அவர் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் வரவுள்ளார். அப்போது அண்ணாமலைக்கு தமிழக பாஜக சார்பில் பிரமாண்ட வரவேற்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு திரும்பியதும் கட்சிப் பணிகளை முடுக்கி விட அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். அவர் லண்டன் போன பிறகு கட்சி அமைதியாக காணப்படுகிறது. எந்த முக்கிய முடிவும் எடுக்கப்படக் கூடாது, யாரும் தேவையில்லாமல் பேசக் கூடாது என்று கட்சித் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டதாக தகவல்கள் கூறி வந்தன. இதனால்தான் எந்தத் தலைவரும் பெரிய அளவில் பேசவில்லை. சின்ன சின்ன பேட்டிகள், உரையாடல்கள் மட்டுமே இடம் பெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
2026 சட்டசபைத் தேர்தலுக்கு திமுகவும், அதிமுகவும் தயாராகி வருகின்றன. மறுபக்கம் விஜய் வேறு வந்து இறங்கியுள்ளார். சீமான் ஒரு பக்கம் முழங்கிக் கொண்டிருக்கிறார். இப்படி ஆளுக்கு ஒரு பாய்ச்சல் காட்டி வரும் நிலையில் அண்ணாமலை வந்த பிறகு பாஜகவும் தனது வேகத்தைக் கூட்டும் என்று தெரிகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}