சென்னை : 2025 - 2026 ம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக சட்டசபையில் இன்று (மார்ச் 14) தாக்கல் செய்தார். இதில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. முன்னதாக திமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து காலை 9.30 மணியளவில், பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

இது திமுக அரசு தாக்கல் செய்யும் நான்காவது பட்ஜெட் ஆகும். இன்றைய பட்ஜெட் தாக்கலை மக்கள் நேரடியாக காண்பதற்காக சென்னையில் 100 இடங்களில் நேரடியாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல தமிழ்நாடு முழுவதும் முக்கிய நகரங்களிலும் எல்இடி திரை மூலம் பட்ஜெட் உரை நேரடியாக ஒளிபரப்பு செய்ய நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், இதுதான் தற்போதைய திமுக அரசின் கடைசி முழு பட்ஜெட். எனவே இன்றைய பட்ஜெட் உரையில் பல புதிய அறிவிப்புகள் வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது தேசிய கல்வி கொள்கை பெரிய அளவில் பிரச்சனையாக பேசப்பட்டு வருவதால் கல்வித்துறை தொடர்பான புதிய திட்டங்கள், அதிக நிதி ஒதுக்கீடுகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் புதிய வேலை வாய்ப்புகளுக்கான அறிவிப்புகளும் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Navaratri 2026 Special: வருஷத்துக்கு நான்கு நவராத்திரி வரும்.. இது தெரியுமா உங்களுக்கு?
Cooking Tips: ராகி + பால் + நட்ஸ் கஞ்சி.. healthy food.. Tips by G Yasmin!
நம் மகளின் புன்னகையில் நல்வாழ்வு மலரட்டும்!
D Rajitha Poem.. கிடைக்காத பேருந்து!
நவராத்திரி ஸ்பெஷல்.. இன்றும் நாளையும் என்னவெல்லாம் செய்ய வேண்டும்.. Full List!
Thentamil Editorial: பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் நவராத்திரி.. மைசூர் முதல் குலசேகரப்பட்டினம் வரை
மகன் .. அழகிய செடிக்கு மலரை அளிக்கும் உயிர் படைப்பு!
பெண்.. தலை நிமிர்ந்து நிற்கும் மிகப் பெரும் ஜோதி!
நட்பூ
{{comments.comment}}