சென்னை : தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 112 சதவீதம் கூடுதலாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தை யாராலும் மறக்க முடியாது. முதலில் சென்னை உள்ளிட்ட நான்கு வட மாவட்டங்களை வெள்ளம் வெளுத்தெடுத்தது. அடுத்து தென் கோடி தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களை உண்டு இல்லை என்று செய்தது. இந்த நிலையில் இந்த வருடம் வட கிழக்குப் பருவமழைக்காலத்தில் தமிழ்நாட்டுக்கு 112 சதவீத அளவுக்கு கூடுதல் மழை பெய்யும் வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு இதுவரை கேரளா, ஆந்திராவை தென் மேற்குப் பருவ மழை உருக்குலைத்து விட்டது. கேரளாவில் பயங்கர நிலச்சரிவே ஏற்பட்டது. இதனால் இந்த ஆண்டு நவம்பர், டிசம்பரில் எவ்வளவு மழை பெய்து இன்னும் என்னென்ன பாதிப்புக்கள் ஏற்படுமோ என மக்கள் பயத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் இந்திய வானிலை மையம் வடகிழக்கு பருவமழழை குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக ஏற்கனவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 18ம் தேதி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஒவ்வொரு பகுதிகளிலும் பருவமழை விலகலுக்கான தேதிகள் குறித்து இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டடு வருகிறது.
இந்நிலையில் இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். தமிழகம், கேரளா, உள் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வழக்கமாக பெய்யும் பருவமழையை விட இந்த ஆண்டு 112 சதவீதம் அதிகமாக மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
வடமாவட்டங்களில் அதிக மழைப் பொழிவும், தென் மாவட்டங்களில் குறைந்த மழைப்பொழிவும் இருக்கும். இந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை தமிழகத்தில் பருவமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் வழக்கத்தை விட அதிகமாக மழை பெய்யும் என்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த முறையும் பெரு மழை மற்றும் வெள்ளப் பெருக்குக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதை மறுக்க முடியாது. இதனால்தான் தமிழ்நாடு அரசு இப்போதே துரிதமான நடவடிக்கைகளைத் தொடங்கி விட்டது. வட கிழக்குப் பருவ மழையை சமாளிப்பது தொடர்பான நடவடிக்கைகளை இப்போதே அரசு முடுக்கி விட்டுள்ளது. நோடல் அதிகாரிகளும் கூட நியமிக்கப்பட்டு வருகின்றனர். தொடர் நடவடிக்கைகள் காரணமாக மக்கள் மனதில் பயம் இல்லை. அதேசமயம், மக்களும் கூட, வெள்ளத்தையும், பெரு மழையையும் எதிர்பார்த்து அதற்கேற்ற முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வான் சாகச நிகழ்ச்சி, உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின்
மெரீனா பீச் விமான சாகசம்.. சென்னை மெட்ரோவுக்கு ஜாக்பாட்.. ஒரே நாளில் 4 லட்சம் பேர் பயணம்
Nobel prizes 2024.. மருத்துவத்திற்கான நோபல் பரிசு .. 2 ஸ்வீடன் ஆய்வாளர்களுக்கு அறிவிப்பு
திமுக அரசு முறையாக திட்டமிடவில்லை.. இது அரசின் தவறுதான்.. சொல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
Kerala tour diaries.. அழகான மலம்புழா அணை .. பிரமிக்க வைக்கும் பாலக்காடு கோட்டை!
பிக்பாஸ் தமிழ் சீசன் 8.. கேம் ஆரம்பிப்பதற்கு முன்னாடியே.. பக்கென்று கொளுத்தி போட்ட பிக்பாஸ்!
விமான சாகச நிகழ்ச்சி மரணங்கள்.. இனிமேல் கவனமா இருங்க.. தவெக தலைவர் விஜய் அட்வைஸ்!
ஏர்ஷோவில் பங்கேற்றோர் போட்டுச் சென்ற குப்பை.. கிட்டத்தட்ட 19 டன்.. அகற்றிய சென்னை மாநகராட்சி!
மதுரையில் 20 ஆயிரம் பேரைத் திரட்டி.. கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்ற.. எம்.பி. சு. வெங்கடேசன்
{{comments.comment}}