சென்னை: தவெகவுடன் கூட்டணி தொடர்பாக சமூக வலைதளங்களில் வரும் தகவல்கள் எதுவும் உண்மை இல்லை என தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி எம் எஸ் முஸ்தபா விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருப்பதாக நேற்று தகவல் வெளியானது. அக்கட்சித் தலைவர் முஸ்தபா, தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோரை நேரில் சந்தித்து பேசுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனையடுத்து தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி தலைவர் முஸ்தபா, தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனாவை சந்தித்து கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் கசிந்து வந்தன. ஆனால் தவெக தலைவர் விஜய் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. தவெக சார்பிலும் எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய்யைச் சந்தித்தது பற்றி தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி எம் எஸ் முஸ்தபா விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது,
நேற்று தவெக தலைவரும் நடிகருமான அன்பு சகோதரர் விஜய் அவர்களை நேரில் சந்தித்து அரசியல் களத்திற்கு வந்ததற்காக வாழ்த்துக்களை தெரிவித்தோம். அவரும் உங்களது இயக்கம் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். தேர்தல் நேரத்தில் அது பற்றி கட்சியினரோடு கலந்தாலோசித்து முடிவெடுப்பதாக கூறினோம்.
அதேசமயம், சமூக வலைத்தளங்களில் கூட்டணி தொடர்பாக வரும் தகவல்கள் எதுவும் உண்மை இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் இந்த நல்லதொரு சந்திப்பினை ஏற்பாடு செய்து கொடுத்த சகோதரர் ஆதவ் அர்ஜுனா அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்.. மக்கள் ஆதரவு யாருக்கு? யார் வென்றால் என்ன நடக்கும்?
Short Story: தங்கக்கட்டி நடைபாதை
ஏன் புரட்டாசி மாத மஹாளய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது?
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் உத்தரவு
தமிழகத்தில் இதுவரை 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு: அமைச்சர் அருண்ராஜ் தகவல்
பிரியாவிடை!
பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் விஜய் இன்று விருந்தளிப்பு
உலகத்தில் சிறந்த பூ எது?
பாலமுரளி கிருஷ்ணா.. ஒரு நாள் போதுமா?
{{comments.comment}}