பிளஸ் 1 தேர்வு முடிவுகள்.. 90.33%  பேர் தேர்ச்சி.. மாணவிகளே வழக்கம் போல முதலிடம்!

May 19, 2023,12:58 PM IST

சென்னை: பிளஸ் 1 தேர்வில் 90.33 சதவீத மாணவ மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம் போல மாணவிகளே அதிக அளவில் பாஸ் ஆகியுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் பிளஸ் ஒன் தேர்வுகள் நடைபெற்றன. 7.76 லட்சம் பேர் தேர்வுகளை எழுதியிருந்தனர். இந்தத் தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் மொத்தம் 90.33 சதவீதம் பேர் பாஸாகியுள்ளனர். கடந்த ஆண்டை விட இது 0.8 சதவீதம் அதிகமாகும்.

வழக்கம் போல மாணவிகளே அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். 94.36 சதவீத மாணவிகளும், 86.99 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.



தமிழ்நாட்டிலேயே அதிக அளவாக 96.38 சதவீத தேர்ச்சியுடன் திருப்பூர் முதலிடம் பெற்றது. 2வது இடத்தை ஈரோடு மாவட்டம் பெற்றது. அங்கு 96.18 சதவீதம் மாணவ மாணவியர் தேர்ச்சி அடைந்தனர். அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 84.97 சதவீதமாக உள்ளது.

பாடவாரியாக நூற்றுக்கு நூறு வாங்கியோர் பட்டியல்:

தமிழ் 9
ஆங்கிலம் 13
இயற்பியல் 440
வேதியியல் 107
கணிதம் 17
கம்ப்யூட்டர் சயின்ஸ் 940 
கணக்குப் பதிவியியல் 995

தேர்வு முடிவுகளை அறிய: http://www.tnresults.nic.in/tpfpecrd.htm

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்