எந்த பக்கம் செல்வது?...முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் மூவர்...யாருக்கு என்ன பிரச்சனை?

Jan 28, 2026,05:49 PM IST

சென்னை : தமிழக அரசியல் களத்தை பொறுத்த வரை தற்போது கூட்டணி விவகாரத்தில் மூன்று பேரை தவிர மற்ற அனைவரும் யார் எந்த பக்கம் நிற்பது என்பது குறித்து முடிவு செய்து விட்டார்கள். என்டிஏ கூட்டணி முடிவாகி விட்டது. திமுக கூட்டணியும் முடிவாகி விட்டது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும், தவெக தலைவர் விஜய்யும் தனித்துப் போட்டி என சொல்லி விட்டு, 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை முடிவு செய்யும் பணியில் இறங்கி விட்டார்கள்.


தற்போதைய நிலவரப்படி, இது வரை கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்காமலும், எடுக்க முடியாமலும், குழப்பத்தில் தனியாக நிற்பவர்கள் பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூன்று பேர் தான். இவர்களில் மூன்று பேருக்கும் மூன்று விதமான பிரச்சனை உள்ளது. 


பாமக நிறுவனர் ராமதாஸ் :




மகன் அன்புமணி உடனான பிரச்சனை காரணமாக என்டிஏ கூட்டணியில் இணைய மறுப்பு தெரிவித்து வருகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். இதனால் திமுக கூட்டணிக்கு செல்லலாம் என்றால் அங்கு திருமாவளவன் இருக்கிறார். இருந்தாலும் அவருடன் ஒத்துப் போகும் மனநிலைக்கு வந்து, திமுக கூட்டணியில் இணையும் முடிவுக்கு வந்து விட்டாராம் ராமதாஸ். ஆனால் திருமாவளவன் ஓகே சொன்னால், உங்களை கூட்டணியில் சேர்த்துக் கொள்கிறோம் என திமுக தலைமை கூறி விட்டதாம். திருமாவளவனோ, ராமதாசும் தானும் ஒரே அணியில் இருந்தால் அது சரியாக வராது என நினைத்து, ராமதாஸ் வருவதற்கு மறுப்பு தெரித்து விட்டாராம். திமுக கூட்டணி கதவுகள் ஏறக்குறைய சாத்தப்பட்டு விட்டதால் என்டிஏ.,வுக்கு போகலாமா? அல்லது வேறு என்ன செய்யலாம் என குழப்பத்தில் இருக்கிறாராம் ராமதாஸ்.


ஓ.பன்னீர்செல்வம் :




அதிமுக.,வில் சேருவதற்கு மட்டுமல்ல, என்டிஏ., கூட்டணியில் கூட ஓபிஎஸ்.,ஐ சேர்க்க கூடாது என பாஜக.,விடம் கண்டிப்பாக சொல்லி விட்டாராம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. கட்சியின் சின்னத்தை முடக்க இப்போது வரை வழக்கு தொடர்ந்து கொண்டிருக்கும் நபரை கட்சியில் சேர்க்க மாட்டேன் என சொல்லி விட்டாராம் இபிஎஸ். தமிழகம் வந்த பியூஸ் கோயலை சந்தித்து எப்படியாவது என்டிஏ.,வில் சேர்ந்து விடலாம் என முயற்சி செய்த ஓபிஎஸ் தரப்பிற்கு ஏமாற்றம் தான் கிடைத்துள்ளது. அம்மாவால் அடையாளம் காணப்பட்டவர் என தன்னை பெருமையாக சொல்லிக் கொள்ளும் ஓபிஎஸ், திமுக.,போனால் ஓட்டு வராது. மரியாதையும் போய் விடும். அதே போல் ஓபிஎஸ்., கூட்டணியில் சேர்ப்பதால் தங்களுக்கு என்ன லாபம் என யோசித்து திமுக.,வும் அவருக்கு நோ சொல்லி விட்டதால் என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார். தவெக பக்கம் செல்லலாம் என்றால், செங்கோட்டையன் நிலையை பார்த்து பின்வாங்கி விட்டாராம் ஓபிஎஸ்.


தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் :




30 சீட், ஒரு ராஜ்யசபா சீட், ரூ.300 கோடி தேர்தல் செலவுக்கு யார் தருகிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி என ஒரே நேரத்தில் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி பேசிக் கொண்டிருக்கிறாராம் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். தற்போது விஜயகாந்த் இல்லாத நிலையில், ஓட்டு சதவீதம் ஒரு சதவீதம் கூட இல்லாத தேமுதிக.,விற்கு எதற்காக 30 சீட், இவ்வளவு கோடிகள் செலவுக்கு கொடுத்து கூட்டணியில் சேர்க்க வேண்டும். அவர்கள் இல்லாமலேயே வெற்றி பெறலாம் என்ற நிலைக்கு அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் முடிவு செய்து விட்டனவாம். இதனால் இரண்டு கட்சிகளிடமும் கெத்து காட்டலாம் என நினைத்த பிரேமலதா, இப்போது என்ன செய்வது என தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறாராம். தவெக.,பக்கம் சென்றால் தேர்தல் செலவுக்கு பணம் தர மாட்டார்களே என்ற தயக்கம் உள்ளதாம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!

news

தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?

news

ராகுல் காந்தி - கனிமொழி திடீர் சந்திப்பு ஏன்? பின்னணி நடக்கும் பரபரப்பு அரசியல்

news

எந்த பக்கம் செல்வது?...முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் மூவர்...யாருக்கு என்ன பிரச்சனை?

news

விஜய் உடன் சேர்ந்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்...ஆரூடம் சொல்லும் எஸ்ஏசி

news

இன்று முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம்

news

திருக்கோயில் சொத்துகளைத் திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும் : நயினார் நாகேந்திரன் கேள்வி!

news

எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிவிட்டாரே: நயினார் நாகேந்திரன்

news

நகைப்பிரியர்களுக்குப் பேரதிர்ச்சி: ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை!

அதிகம் பார்க்கும் செய்திகள்