சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தீவிரம் அடைந்ததை தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக நேற்று கனமழை பெய்தது. குறிப்பாக திருவண்ணாமலை, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.
புதுச்சேரியில் கன மழை

அதேபோல் புதுச்சேரியில் நல்ல மழை பெய்துள்ளது. குறிப்பாக அரியாங்குப்பம், தவளக்குப்பம், காலாப்பட்டு, கிருமாம்பாக்கம், வில்லியனூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக கன மழை வெளுத்து வாங்கியது. இதனால் அங்கு இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் அவலூர் பேட்டையில் 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.அதேபோல் திருவள்ளுவர் மாவட்டம் பொன்னேரியில் 7 சென்டிமீட்டர் மழை, ஊத்துக்கோட்டை 6 சென்டிமீட்டர், கும்மிடிப்பூண்டி 5 சென்டிமீட்டர், தாமரைப்பாக்கம் 3 சென்டிமீட்டர் மற்றும் சோழவரத்தில் 2 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது.
இந்த நிலையில் தென்னிந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நீடித்து வருகிறது. இதற்கிடையே வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று தமிழகத்தில் ஒரு சில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பள்ளிகள் விடுமுறை
கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக இன்று புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகள்,அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி
Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?
ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்
சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!
செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!
{{comments.comment}}