சென்னை: மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள லாஸ் அருவி, காட்டேரி அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தற்போது விடுமுறை என்பதால் இதனை காண இப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.
அதேபோல் நத்தம், சாணார்பட்டி, திண்டுக்கல், கோவில்பட்டி, கொசவபட்டி, விராலிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று திடீரென கனமழை பெய்தது. இதனால் வெட்கை தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மேலும் தாராபுரம் பகுதிகளில் நேற்று இடி மின்னல் காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் அப்பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது.

இந்த நிலையில் மன்னார் வளைகுடா பகுதிகளில் நீடித்துவரும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி
இன்று 19 மாவட்டங்களில் கன மழை:
நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர்,தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கடலூர், சிவகங்கை ஆகிய 19 மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை கன மழை:
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், ஆகிய மாவட்டங்களில் நாளை ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை நிலவரம்:
அதேபோல் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.தமிழக கடற்கரை பகுதிகளான தென் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள் மற்றும் அரபிக் கடல் பகுதிகளான கேரளா கடலோரப் பகுதிகளில் இன்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்று வீச கூடும்.
இதனால் இன்று மீனவர்கள் மேற்குறிப்பிட்ட கடற்கரைப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}