சென்னை: வங்க கடலில் நிலவிவரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று 6 மாவட்டங்களில் கனமழையும், நாளை 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடைந்து கடந்த சில வாரமாக பரவலாக கனமழை பெய்து வந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது மழையின் தீவிரம் குறைந்து ஒரு சில கடலோரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தெற்கு வங்கக்கடல் மத்திய பகுதிகளில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது இன்று தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு தினங்களில் மேலும் வலுப்பெற்று மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடற்கரை பகுதிகளை அடையும். இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று கனமழை:

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், உட்பட ஆறு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மிக கனமழை ( ஆரஞ்சு அலர்ட்):
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை கனமழை:
விழுப்புரம், கடலூர், ஆகிய இரண்டு மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் கனமழை:
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்,ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை மறுநாள் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மிதமான மழை:
தமிழகத்தில் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கரூர் வழக்கு.. 2வது சிபிஐ விசாரணை முடிவுக்கு வந்தது.. புன்னகையுடன் வெளியேறிச் சென்ற விஜய்!
2026ம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டம்.. நாளை கூடுகிறது.. ஆளுநர் உரையாற்றுவாரா?
அடுத்த திட்டம் என்ன?...ஆதரவாளர்களுடன் சசிகலா தீவிர ஆலோசனை
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.. இதுவரை 12.80 லட்சம் பேர் மனு
மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் தெறி ரீ ரிலீஸ்...காரணம் இது தானா?
71 மாவட்டங்களுக்கும் தலைவர்கள்.. ஒரு வழியாக அறிவித்தது காங்கிரஸ்!
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1,360 உயர்வு
அமைதி .. சத்தம் இல்லாமல் வந்தபோது...!
சிவபெருமானின் முழு அருளை பெற இந்நன்நாளை தவற விடாதீர்கள்
{{comments.comment}}