சென்னை: டெல்டா மாவட்டங்களில் நாளையும், நாளை மறுநாளும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நாள் முதல் தற்போது வரை நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக வங்கக்கடலில் உருவான காற்று சுழற்சிகள் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்து வந்தது. இதனால் இந்த வருடத்தின் பருவமழை இயல்பை விட மூன்று சதவீதம் அதிகரித்து உள்ளது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் வங்கக்கடலில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழ்நாட்டை நோக்கி நகர இருப்பதால் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தமிழ்நாடு மழை குறித்த ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில், டெல்டா மாவட்டங்களில் இன்று இரவு தொடங்கி பெய்யும் மழை, நாளையும் நாளை மறுநாளும் மிக கனமழையாக தீவிரம் அடையும். இதனால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.
நாகை, திருவாரூர், காரைக்கால், தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. 26 ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்களுக்கு விரைவில் IMD மூலம் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படலாம்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆகிய மாவட்டங்களில் விரைவில் மழைக்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் இன்று பெரிதாக எதையும் எதிர்பார்க்க வேண்டாம்.. பொறுமையாக காத்திருப்போம் என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நான் காணும் உலகமடா...!!
அன்பளிப்பு (கவிதை)
கோவையில் கடத்தப்பட்ட இளம் பெண்ணை மீட்க என்ன நடவடிக்கை?... டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கும், நாளை 4 மாவட்டங்களுக்கும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் காலதாமதமா? ஆளுநர் மாளிகை விளக்கம்
திருமுருக கிருபானந்த வாரியார் .. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி: செங்கோட்டையன் பேட்டி!
பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு திமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டாமா?:எடப்பாடி பழனிச்சாமி
யாரும் செய்யாத பித்தலாட்டம்..திருச்சியில் கூட தங்காமல் விஜய் சென்னைக்கு ஓடி விட்டார்: வைகோ ஆவேசம்!
{{comments.comment}}