சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும், நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது. பின்னர் இந்த புயல் கடந்த சனிக்கிழமை புதுச்சேரி அருகே கரையை கடந்து வலுவிழந்து தற்போது நிலப்பரப்பின் வழியாக கர்நாடகத்தை நோக்கி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நகர்ந்து கொண்டுள்ளது.

இதன் எதிரொலியாக தற்போது திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் அணைகளும் ஆறுகளும் வேகமாக நிரம்பி அதிகப்படியான உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கி கடல் போல் காட்சியளிக்கின்றன. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் மிக கனமழை முதல் அதி கன மழை வரை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று அதி கனமழை(ரெட் அலர்ட்):
கோவை, நீலகிரி, ஆகிய மாவட்டங்களில் இன்று அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
மிக கனமழை (எல்லோ அலர்ட்):
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கரூர், மதுரை, விருதுநகர், தென்காசி, ஆகிய 10 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான எல்லோ அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
மாலை 4:00 மணிக்குள் கனமழைக்கு வாய்ப்பு:
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை,கடலூர், ஆகிய 7 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணிக்குள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மிக கனமழை (ஆரஞ்சு அலர்ட்):
ஈரோடு திருப்பூர் தேனி திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என்பதால் நாளை 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
நாளை கனமழை:
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல்,கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை,திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர்,ஆகிய 15 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கேரளா மழை:
அதேபோல் கேரளாவில் உள்ள கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு, கண்ணூர், காசர்கோடு, ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 4, 5, 6,ஆகிய தேதிகளில் எந்த வானிலை அறிக்கையும் இல்லை எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கடலோர தமிழகத்தில் நாளை மறுநாள் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!
முதல் பேச்சிலேயே தமிழ்நாட்டைத் தொட்ட பாஜக தலைவர் நிதின் நபின்.. திட்டம் என்ன?
தூக்கி எறியப்பட்ட என்னை அரவணைத்து, அன்பு செலுத்தியவர் விஜய்: செங்கோட்டையன் ஓபன் டாக்!
தமிழகப் பதிவுத்துறை முக்கிய அறிவிப்பு: 2 நாட்களுக்கு Citizen Portal இணையதளம் செயல்படாது!
கூட்டணி குறித்து தற்போது வரை பாஜகவிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை: பிரேமலதா விஜயகாந்த்!
தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன்... அன்புடன் வரவேற்ற எடப்பாடி பழனிச்சாமி
முழு மனதோடு என்டிஏ கூட்டணியில் இணைந்திருக்கிறேன்...தினகரன் அதிரடி
தேஜகூவைத் தேடி அடித்துப் பிடித்து ஓடி வரும் கட்சிகள்.. அடுத்து யாரு தேமுதிகவா?
பக்தர்களே தயராகுங்கள்! பழனி தைப்பூசத் திருவிழா ஜனவரி 26-ல் தொடக்கம்!
{{comments.comment}}