சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக நாகை, மயிலாடுதுறை, சென்னை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் இப்பகுதி முழுவதும் பெரும் சேதத்தை சந்தித்தது. இதனால் தங்களின் உடைமைகளை இழந்து மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. அதேசமயம் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஏரிகள், ஆறுகள், அடிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதுடன் அதிகப்படியான உபரி நீரும் வெளியேற்றப்படுகிறது.
ஃபெஞ்சல் புயலின் தாக்கம் தற்போது யூடன் போட்டு திருச்சி, மதுரை, சேலம், திண்டுக்கல், தென்காசி, மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று பரவலாக கன மழை வெளுத்து வாங்கியது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த கனமழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்தது. சாலைகளில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

குறிப்பாக மதுரையில் திருப்பரங்குன்றம், வில்லாபுரம், அவனியாபுரம், விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கியது. அதேபோல் வேலூரில் மூன்றாவது நாளாக பெய்த தொடர் கனமழை காரணமாக முக்கிய சாலைகள், பேருந்து நிலையங்கள், குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் ஆக்கிரமித்துள்ளது. பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி இன்று நீலகிரி,கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கோவை, சேலம்,திருப்பூர், மதுரை, தேனி, கரூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர், ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பூவ பூவ பூவே.. மனதை அமைதியாக்கும்.. மன அழுத்தத்தை மட்டுப்படுத்தும் பூக்கள்!
US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!
ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!
கூரைவீடு !
ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!
Short Story: மனைவியின் அருமை
Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!
Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?
பனிக்குப் போர்வையாகவும்.. வெயிலுக்கு நிழலாகவும்!
{{comments.comment}}